தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 juni 2013

அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் யேர்மனியில் மேற்கொண்ட பொய்ப் பரப்புரைக்கு பதிலடி!- யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை


கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிராம யாத்திரை!
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 12:06.21 AM GMT ]
கிளிநொச்சி மாவட்டத்தில்லுள்ள கிராமங்கள் தோறும் கிராம யாத்திரையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக இன்று கிளிநொச்சி கிருஸ்ணபுரம் – விநாயகபுரம் விடிவெள்ளி விளையாட்டுக் கழகத்தினருடன் அவர்களின் மைதானத்திலேயே சந்திப்பொன்று நடைபெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் நா.வை.குகராசா, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சேதுபதி, இளைஞர் அணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைவர் சு. சுரேன் , இளைஞர் அணியின் செயலாளர் கு. சர்வானந்தா, மற்றும் கட்சியின் செயற்பாட்டாளரான ஜெயக்குமார் ஆகியோர் சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.
முதலில் கால்நடையாக சில வீடுகளுக்கு சென்று மக்களுடன் உறவாடி அவர்களின் கருத்துக்களோடு இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் கொண்டு வரப்பட்ட 13 வது திருத்தம் என்பது தமிழர்களுக்கு தீர்வல்ல, அதனை நாங்கள் ஒரு ஆரம்பப்புள்ளியாகவோ அல்லது இடைக்கால தீர்வாகவோ ஏற்றுக்கொள்ளவில்லை.
13 வது திருத்தம் என்பது என்ன? அதில் தமிழர்களின் தேசிய அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வழிமுறைகள் என்ன உண்டு, இதன் மூலம் தமிழர்களுக்கு கௌரவமான நீதியான தீர்வு கிட்டுமா? தேர்தல் நடந்தால் நாங்கள் ஏன் பங்குபற்ற வேண்டும் போன்ற விடயங்கள் கருத்தாய்வு செயப்பட்டது.
அத்துடன் எங்கள் தமிழினத்தை அழிக்க மேற்கொள்ளப்படும் கலாச்சாரச் சீரழிவுகளை நாம் எதிர்கொள்வது போன்ற விடயங்களும் மிக ஆழமாக ஆராயப்பட்டது.
தமிழர்களின் தேசிய அபிலாசைகளை அடைய நீங்கள் மனம் தளராமல் செயற்படுங்கள், நாங்கள் உங்களுடன் இருப்போம் என்று மக்கள் நம்பிக்கையூட்டி அனுப்பி வைத்தனர்.


அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் யேர்மனியில் மேற்கொண்ட பொய்ப் பரப்புரைக்கு பதிலடி!- யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 12:43.21 AM GMT ]
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல.பீரிஸ் யேர்மனியில் கடந்த 13 -16 திகதிகளில் யேர்மனி பெர்லின் நகரத்தில், இன அழிப்பை மூடி மறைக்கும் பொய்ப் பரப்புரை பயணத்தில் யேர்மன் வெளிவிவகார அமைச்சர் Gido Westerwelle மற்றும் யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து சென்றுள்ளார். 
அத்துடன் இவ் வருகையில் இலங்கை மற்றும் யேர்மன் அரசுக்கு இடையான இராஜதந்திர உறவின் 60 வது வருட தினத்தை இலங்கையின் தூதரகத்தின் வளாகத்தில் ஈழத்தமிழர்களின் மீதான இன அழிப்பை மூடி மறைக்கும் முகமாக பாரிய விழாவாக கொண்டாடியுள்ளார்கள்.
வெளிவிவகார அமைச்சுடன் நடைபெற்ற சந்திப்பில் G .L. Peiris சிறீலங்காவில் போர் முடிந்து மிக சிறப்பான முறையில் சமூக அபிவிருத்தி நடைபெறுகின்றது என்றும், தாம் சர்வதேச ரீதியாக மனிதவுரிமைகளை பேணுவதில் முன்னுதாரணமாக விளங்குவதாகவும் அத்தோடு யேர்மனியில் தமிழ் மக்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் எனவும் பொய் உரைத்து கூறியுள்ளார்.
G .L. Peiris பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் முகமாக சென்ற திங்கட்கிழமை 24.06.2013  அன்று யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை யேர்மன் அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பை மேற்கொண்டனர்.
இச் சந்திப்பில் இலங்கையில் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பு மற்றும் இலங்கை அரசின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் முகமாக தாயகத்தில் அல்லறும் மக்களின் காணொளி சாட்சியாக காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து இச் சந்திப்பில் கலந்துகொண்ட அதிகாரிகள்  இலங்கை அரசின் பன்முக வேடத்தை நன்கு அறிவார்கள் என்றும் தாம் இன்றும் அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களை வன்மையாக கண்டிப்பதாகவும், ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் முகமாக  இலங்கை அரசு எதிர்காலத்தில் உறுதியோடு செயற்பட வேண்டும், தவறும் பட்சத்தில் தாம் அங்கு நடைபெற்ற போர்க்குற்றம் , மானிடத்திற்கெதிரான குற்றங்கள் விடயமாக அனைத்துலக சுயாதீன விசாரணைகளை வலியுறுத்த நேரிடும் என்றும் குறிப்பிட்டார்கள்.
குறிப்பாக யேர்மன் Friedrich - Ebert -Stiftung அமைப்பின் பணியாளர் இலங்கையில் கைது செய்யப்பட்டது விடயமாக அவர்கள் தமது கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், இச் சம்பவம் இலங்கை அரசின் வன்முறையை கோடிட்டு காட்டுகின்றது என்பதை குறிப்பிட்டனர்.
இச் சந்திப்பு Chatham House Rule அடிப்படையில் நடைபெற்றதால் கலந்து கொண்டவர்களின் விபரம் மற்றும் அவர்கள் கூறிய கருத்துகள் இனம்காட்ட முடியாதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை, யேர்மன் அனைத்து கட்சிகளுடனான தொடர்புகளை பேணி செயற்படுவதின் ஊடாக கடந்த காலத்தில் யேர்மன் பாராளுமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிரான சில கேள்விகள் மற்றும் பிரேரணை கொண்டுவர முயற்சிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten