[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 01:43.59 PM GMT ]
ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை இராணுவு வீரர்களுக்கு தமிழகத்தில் எந்த பகுதியிலும் பயிற்சி அளிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உறுதி அளித்திருந்தார்.ஆனால், இலங்கைக்கான இராணுவப் பயிற்சியை மத்திய அரசு நிறுத்தவில்லை.
கமாண்டர் எம்.எஸ்.பண்டார தசநாயகே, மேஜர் சி.எஸ்.ஹரிஸ்சந்திர ஹெட்டிரச்சிகே ஆகிய அதிகாரிகளுக்கு கடந்த மே மாதம் 27-ம் திகதி முதல் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து இலங்கை இராணுவ அதிகாரிகளை தமிழகத்தில் இருந்து, ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள இராணுவ பயிற்சி மையத்திற்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இதனை ஏற்க இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இலங்கை அதிகாரிகள் இருவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் இன்று காலை இலங்கைக்கு சென்றடைந்தனர்.
இதுதொடர்பாக இலங்கை இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூர்ய வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட இலங்கை அதிகாரிகளுக்கு செகந்திராபாத்தில் பயிற்சி அளிக்க இந்தியா முன்வந்ததை இலங்கை அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். இருப்பினும், ஆரம்ப கட்ட பயிற்சிக்காக அனுப்பப்பட்ட அவர்கள், செகந்திராபாத்தில் உயர் பயிற்சி பெற தகுதி உடையவர்கள் இல்லை.
முற்றிலும் மாறுபட்ட நோக்கத்தில் அளிக்கப்படும் உயர் பயிற்சியால் அந்த அதிகாரிகளுக்கோ, அவர்களுக்கு உடனடியாக பணி வழங்குவதால் இராணுவத்துக்கோ ஆதாயம் இல்லை. எனவே, இரண்டு அதிகாரிகளும் வெலிங்டன் கல்லூரியில் இருந்து திரும்ப பெறப்பட்டனர். அவர்கள் இன்று காலை வந்து சேர்ந்தனர்.
இலங்கை இராணுவத்தில் உள்ள அதிகாரிகள், வீரர்களின் திறமையை மேம்படுத்த இந்திய இராணுவம் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. 40 ஆண்டுகளாக இந்த மதிப்புமிக்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள சில பயிற்சி மையங்களில் இலங்கை வீரர்கள் பயிற்சி பெறுவதில் கடினமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் தமிழர்களின் பிடியில் இருந்து தமிழ் கூட்டமைப்பு விடுபட வேண்டுமாம்!- ஹக்கீம் கூறுகிறார்
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 01:24.46 PM GMT ]
கல்முனையில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு வழக்கமான ஒரு கட்சியல்ல. ஒரு விடுதலை இயக்கம். அது சமூகத்தின் உரிமை விடயங்களில் வலுவான தீர்மானங்களை எடுக்கும். இது இந்தக் கட்சியின் இயல்பு.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஒரு புரட்சிகரமான தீர்மானத்தை எடுக்கும் என்று கருதப்பட்டத
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஒரு புரட்சிகரமான தீர்மானத்தை எடுக்கும் என்று கருதப்பட்டத
ஆனால் நாம், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தோம். தூரநோக்குடன் நாம் எடுத்த தீர்மானத்தை பலரும் விமர்சித்தனர். எமது தாற்பரியத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பினால் புரிந்து கொள்ள முடியாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைத்திருந்தால், சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்திருக்க முடியாது.
இலங்கை அரசாங்கத்தில் இருப்பதால் தான் இந்த போராட்டத்தை எம்மால் மேற்கொள்ள முடிகிறது.
இதனை முஸ்லிம் காங்கிரஸ் தனித்துச் செய்ய முடியாது. ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்துக் கொண்டு தான் போராட வேண்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களின் பிடியிலிருந்து விடுபட வேண்டும்.
அவர்கள் தமது சொந்தக் காலில் அரசியல் நடத்த முன்வர வேண்டும்.
அரசியலமைப்பின்படி இரண்டு மாகாணங்களை, நினைத்த மாதிரி இணைந்து கொள்ள முடியாது. அதனை நாடாளுமன்றம் தான் செய்ய வேண்டும். மேலும் சிறிலங்கா அதிபரும் அதற்கு இணங்க வேண்டும்.
பெருந்தேசியவாதிகள் தமது வாக்குகளை அள்ளிக் கொண்டு போய் விடுவார்கள் என்ற அச்சம் இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த அரசாங்கத்தை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட வேண்டும் என்று பெருந்தேசியவாதிகள் செயற்படுகின்றனர்.
இதனை இலங்கை அரசாங்கம் ஒரு ஆபத்தாக நினைத்து கொண்டிருக்கிறது.
பெருந்தேசியவாதிகள் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எடுக்கும் நடவடிக்கைகளை, சிறிலங்கா அரசாங்கம் பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் அமைத்திருக்கும் தெரிவுக் குழுவில் முஸ்லிம் காங்கிரஸை இணைத்துக் கொள்ள வேண்டும்.
தெரிவுக் குழுவின் நம்பகத்தன்மைக்கு குறைந்த பட்சம் முஸ்லிம் காங்கிரசாவது இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten