[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 12:30.55 AM GMT ]
இதற்கு அந்தக் கட்சியின் இணைக்கட்சிகளான டெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் பெயரும், முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனின் பெயர்களும் முதலமைச்சர் வேட்பாளர்கள் நிலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் நேற்று கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகள் இந்த முதலமைச்சர் வேட்பாளர் தெரிவை மேற்கொள்ளவிருந்த போதும் அதற்கான முடிவு பின்தள்ளிவைக்கப்பட்டது.
இலங்கை ஆபத்தான நாடு! அமெரிக்கப் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை! நிராகரிக்கிறது சுற்றுலாத்துறை
[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 12:21.17 AM GMT ]
இலங்கை செல்லும் அமெரிக்கப் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பிரஜைகளை இலக்கு வைத்து இலங்கையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்காவின் அண்மைய பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய மாதங்களாக வெளிநாட்டு பிரஜைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகவும், பொது இடங்களில் வெளிநாட்டுப் பெண்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைப் பொதுப் பயணிகள் பஸ்களில் அமெரிக்கப் பிரஜைகள் பயணம் செய்யக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் பெண்கள் தனியான பயணங்களை மேற்கொள்வது உசிதமானது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு எதிரான கொலை வழக்கு விசாரணைகள் கால தாமதமடைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டுக்கள் பற்றி இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜௌபர் தமிழோசைக்கு தெரிவித்ததாவது
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கு முழுப் பாதுகாப்பு கிடைக்கிறது. எந்தவித பிரச்சனைகளோ அச்சுறுத்தல்களோ ஏற்படாது என்பதை உத்தரவாதமளிக்கிறோம். சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பளிக்க தனியான பொலிஸ் பிரிவு ஒன்று இயங்குகின்றது. அவர்கள் சுற்றுலாப்பயணிகளுக்கு வேண்டிய பாதுகாப்பு அளிப்பார்கள்.
அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் எந்தநேரமும் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதனால் மிகக் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று பிரித்தானியா தனது நாட்டு பிரஜைகளுக்கு தெரிவித்துள்ளது பற்றி நாம் தெரிவிக்கின்றோம். அமெரிக்காவில் தான் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு என்பதை உறுதியாகக் கூறுகின்றோம்.
இலங்கையில் விளையாட்டு மைதானங்கள், பஸ்கள், ரயில்கள் போன்ற இடங்களில் மேற்கத்தைய பெண்களை இலக்கு வைத்து பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அதிகரித்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல்களை நாங்கள் முற்றாக மறுக்கிறோம். ஏனெனில் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நடைபெறவில்லை. அதற்குரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதையும் திட்டவட்டமாக கூறிக்கொள்கிறோம்.
பிரித்தானிய பிரஜை கொலை தொடர்பாக தெரிவிக்கையில், அது மிதமிஞ்சிய மதுபோதையில் தற்செயலாக நடைபெற்ற ஒரு துன்பியல் செயல். ஆனால் சுற்றுலாப்பயணியை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்வதுடன், இக்கொலை சம்பந்தமான வழக்கு இரண்டு வருடமாக நீடித்துச் செல்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறோம்.
ஆனால் இது தொடர்பாக நாம் சட்டமா அதிபருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளோம். அவரும் இவ்வழக்கை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் இது சம்பந்தமாக விரைவில் நீதி கிடைக்கும் எனவும் உறுதியளித்திருக்கிறார் என்றார் ரூமி ஜௌபர்.
Geen opmerkingen:
Een reactie posten