தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 juni 2013

முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்கா கால்பந்தாட்டப் பயிற்சி

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலைக்கு புத்துயிரூட்ட அரசு முயற்சி! சூழல் பாதிக்கப்படும் என்கிறார் சூழலியலாளர்
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 07:28.13 AM GMT ]
வடக்கின் மிகப் பெரும் தொழிற்சாலைகளில் ஒன்றான காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
வடக்கில் நிலவிய போர் சூழல் காரணமாக 1990ம் ஆண்டு காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை மூடப்பட்டது.
அதற்கு முன்னரான காலப் பகுதியில் இலங்கையின் சீமெந்துத் தேவையில் சுமார் 20 வீதம் சீமெந்து இங்கிருந்துதான் உற்பத்தி செய்விக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைப்பது தொடர்பில் தற்போது அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.
அதன் ஒருகட்டமாக தொழிற்சாலையைப் புனரமைத்து இயங்க வைப்பதற்கான சர்வதேச மட்டத்திலான டெண்டர் அறிவித்தல் மிக விரைவில் கோரப்படவுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை மீண்டும் இயங்கும் பட்சத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சீமெந்தில் 25 சதவீதத்தை இங்கே உற்பத்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2ம் இணைப்பு
சுற்றுச் சூழல் நெருக்கடியினை யாழ்.மாவட்டம் எதிர்கொள்ளும்!- சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன்
யாழ்.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீளவும் ஆரம்பிக்கபடுவதன் மூலம் மிகப்பெரும் சுற்றுச் சூழல் நெருக்கடியினை யாழ்.மாவட்டம் எதிர்கொள்ளும் என தெரிவித்துள்ள சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன், வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக பல லட்சம் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த நிலத்தை யாருக்கும் தரைவார்க்க முடியாதெனவும் கூறியுள்ளார்.
சுற்றுச் சூழல் தொடர்பான ஊடகவியல் என்ற கருப்பொருளில் யாழ்.ஊடக அமையத்தில் அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
குறித்த சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட போது அந்தப் பிரதேசத்தில் பெருமளவு மூல வளங்கள் காணப்பட்டன.
குறிப்பாக தற்போது ஊரழு, கெருடாவில் பிரதேசங்களில் காணப்படுவதைப் போன்று நிலத்திற்கு மேல் கல் வளர்ந்து காணப்பட்டது.
எனினும் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு சில வருடங்களில் பெருமளவு கல் தோண்டப்பட்டுவிட்டது.
பின்னர் யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்ததன் பின்னர் கல் தோண்டப்பட்ட இடங்கள் முன்னர் இருந்ததை விடவும் ஆழமாகவும், அதிக பரப்பளவு கொண்டதாகவும் மாறியிருக்கின்றது.
இந்த இடைப்பட்ட காலத்திற்குள் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் யாழ்.மாவட்டத்தில் எந்த அபிவிருத்திப் பணிகளும் இடம்பெற்றதாக நாம் அறியவில்லை.
இந்நிலையில் தொழிற்சாலையினை மீளவும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.
எம்மிடம் இருக்கும் சுண்ணாம்பு கல்லே எங்கள் பலமும், பலவீனமுமாகும்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தையும், புத்தளம் பிரதேசத்தையும் ஒரு நேர்கோட்டின் மூலம் இணைத்தால் மேல் உள்ள பகுதி கருங்கல் பிரதேசம், கீழ் உள்ள யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்குப் பகுதி சுண்ணாம்புக் கல் பிரதேசம். இதுவே மழைநீரை சேமித்து பெருமளவு நிலத்தடி நீரை வைத்திருக்கின்றது.
எனவே அந்த சுண்ணாம்புக் கல் பாறைகளை தொடர்ச்சியாக தோண்டி எடுப்பதன் மூலம் மிகப்பெரிய நெருக்கடியினை எமது பிரதேசம் நிச்சயமாக எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே வேலைவாய்புக்களை எதிர்பார்த்து நீண்டகாலம் எமது மக்கள் வாழ்ந்த பெறுமதியான இயற்கைச் சொத்தை யாருக்கும் தாரைவார்க்க முடியாது.
எனவே இது குறித்து மக்கள் மிகவும் விழிப்பாகவும், தெளி வாகவும் இருக்கவேண்டும். என அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்கா கால்பந்தாட்டப் பயிற்சி
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 07:33.51 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 500 பேருக்கு அமெரிக்காவின் கால்பந்தாட்டப் பயிற்றுனர் ஒருவர் பயிற்சி அளிக்கவுள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில கால்பந்தாட்டப் பயிற்றுனரான மெட் பில்மன் என்பவரே இவ்வாறு பயிற்சிகளை வழங்கவுள்ளார்.
இந்தக் கால்பந்தாட்ட பயிற்சி முகாம் வரும் ஜுலை மாதம் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறவுள்ளது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.
இதில் மெட் பில்மனுடன் இன்னும் பல பயிற்றுனர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
பயிற்சி முகாமில் கலந்து கொள்வோருக்கு விளையாட்டு உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten