தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 juni 2013

தயா மாஸ்டருக்கு புதுப்பொறுப்பு!

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக பிரிகேடியர் ரவிப்பிரிய நியமனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 03:21.47 PM GMT ]
வன்னி யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களில் ஒருவராக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிகேடியர் ஜீ.டி. ரவிப்பிரிய, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் முக்கிய பெண் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் படுகொலையில் இவருக்குத் தொடர்பிருப்பதாக பரவலான தகவல்கள் கசிந்திருந்தன.
மேலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்த போது, அந்தத் தாக்குதலை மேற்கொண்ட இராணுவப் பிரிவிலும் பிரிகேடியர் ரவிப்பிரிய கட்டளைத் தளபதியாக பணியாற்றியிருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சாகி கால்லகே, அமெரிக்காவில் நடைபெறும் இராணுவப் பயிற்சிப் பாடநெறியொன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அவரது வெற்றிடத்துக்கு தற்போது பிரிகேடியர் ஜீ.டி. ரவிப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக பிரிகேடியர் ரவிப்பிரிய, இராணுவ தலைமையகத்தின் ஆளணிவள பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.
அந்த இடத்தில் தற்போது பிரிகேடியர் பி.டி. கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
தயா மாஸ்டருக்கு புதுப்பொறுப்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 03:51.17 PM GMT ]
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரிடம் அரசாங்கம் புதுப் பொறுப்பொன்றை வழங்கியுள்ளது.
நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான அரச தரப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிக்கும் பொறுப்பு தற்போது அவரிடம் வழங்கப்பட்டுள்ளதாக அலரி மாளிகையின் முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் வாழும் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளை தெளிவான முறையில் தான் இனம் கண்டுள்ளதாகவும், அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்படும் என்றும் இது தொடர்பில் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிக்கும் பணியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சில சிங்கள அமைச்சர்களும் தயா மாஸ்டருக்கு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten