தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 juni 2013

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை! ஆகஸ்ட் 25ல் இலங்கை பயணம்!- நவநீதம்பிள்ளை

அமைச்சர் அதாவுல்லா கையாலாகாதவர்!- அமைச்சர் மைத்திரிபால கடும் சாடல்
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 02:09.46 AM GMT ]
மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் அதாவுல்லா கையாலாகாதவர் என்றும், தனது பொறுப்புகளை சரிவர நிறைவேற்றத் தெரியாதவர் என்றும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கடுமையாகச் சாடியுள்ளார்.
நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் நேற்று நடைபெற்ற செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு அமைச்சர் அதாவுல்லாவை கடுமையாக சாடியுள்ளார்.
டெங்கு வராமல் தடுப்பது உள்ளூராட்சி அமைச்சின் பொறுப்பில் உள்ள விடயம். ஆனால் நமது உள்ளூராட்சி அமைச்சருக்கு டெங்கு நோய்த் தடுப்பு செயற்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்துக் கூட எதுவும் தெரியாது.
பொதுமக்களுக்கும் இதுபற்றி எதுவும் தெரியாது. டெங்கு நோய் வந்தால் எல்லோரும் சுகாதார அமைச்சரையே குற்றம் சொல்கிறார்கள்.
ஆனால் உள்ளூராட்சி அமைச்சின் மூலம் தான் அதைத் தடுப்பதற்கான நடவடிக்கையும், நாட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் பொறுப்பான அமைச்சர் தனது கடமையை சரிவர செய்வதில்லை. அவரை யாரும் குறை காண்பதுமில்லை.
சுகாதார அமைச்சின் மூலம் டெங்கு பரவும் போது சிகிச்சை தான் அளிக்க முடியும். அதனை நான் சிறப்பாக செய்துள்ளேன்.
இதனை எந்த இடத்திலும் நான் பேசத் தயார். யாருக்கும் நான் அஞ்சப போவதிலலை என்றும் அமைச்சர் மைத்திரிபால மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை! ஆகஸ்ட் 25ல் இலங்கை பயணம்!- நவநீதம்பிள்ளை
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 02:04.35 AM GMT ]
இலங்கைக்கு தாம் எதிர்வரும் ஆகஸ்ட் 25 ம் திகதியன்று பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் கருத்துரைத்துள்ளார்.
2011ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே நவநீதம்பிள்ளையின் பயணம் இடம்பெறுகிறது.
இதேவேளை நவநீதம்பிள்ளையின் பயணம் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் என்று இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் ரவீந்திரநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten