தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 juni 2013

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஆதரவு வழங்காத அனைவரும் ஜனநாயக விரோதிகள்: கெஹலிய


அரசாங்கம் பாரிய அரசியல் வடுவை ஏற்படுத்தியுள்ளது: பஸீர் சேகு தாவூத்
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 06:24.54 AM GMT ]
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு இடமளிக்கப்படாமை ஒரு மிகப் பெரிய குறைபாடு மாத்திரமல்ல பாரிய அரசியல் வடுவும் ஆகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், அமைச்சருமான பஸீர் சேகு தாவூத் தெரிவித்தார்.
ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மாஞ்சோலைக் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட காழி நீதிமன்ற திறப்பு விழா நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் இந்த தகவலை தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்தும் உரையாற்றுகையில்,
“இதுவரை எந்தவொரு அரசாங்கமும் அரசியலில் இப்படியானதொரு தவறைவிடவில்லை. இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன்வைத்துள்ள உறவை சரியான முறையில் பரிசீலனை செய்து ஆகுமா?ஆகாதா? என படம் போட்டு பார்க்கும் காலம் வந்து விட்டது.
இலங்கையில் இனப்பிரச்சினை என்பது இல்லை என அரசாங்கமும் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளும் கூறி வந்தது என்பது நாம் சகலரும் அறிந்த விடயமாகும். ஆனால் இப்போது அரசாங்கம் முன் வந்துபாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்தது என்பது இந்நாட்டில் இனப்பிரச்சினையொன்று உள்ளது என்பதை சட்டபூர்வமாக அங்கீகரித்த ஒருநிகழ்வு ஆகும்.
இனப் பிரச்சினை இருக்கின்றது அப் பிரச்சினைக்கு தீர்வு தேவை என்றால் பேசத்தான் வேண்டும் ஆனால் சம்மந்தப்பட்டவர்களையும் உள்ளடக்கியதாக அந்தப் பேச்சு அமைய வேண்டும்.
தற்போது அரசாங்கம் பிரச்சினைகளை தீர்பதற்காக அல்லது ஒரு யாப்புரீதியாக தீர்வை கொண்டு வர வேண்டும். தீருத்தங்கள் ஊடாக அல்லதுபேச்சுவார்த்தை ஊடாக தீர்வை கொண்டு வர வேண்டும் என நம்பி தற்போது செயல்படுகின்றது. நீண்ட காலத்தின் பின்பு பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கம்பலவிதமான கோணங்களிலும் அரசியலை சிந்திக்கின்ற பலவிதமான கோட்பாடுகளுடனும் முரண்பாடுகளுடனும் இணைந்திருக்கின்றது.அப்படியான சூழ்நிலையில் இனப்பிரச்சனை ஒன்று உள்ளது என்பதைஇப்போதே அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு வாருங்கள், வாருங்கள், என தமிழ் தேசியகூட்டமைப்புக்கு அரசாங்கம் தொடர்ந்து அழைப்புக்களை விடுத்து வந்தாலும் இதுவரை அவர்கள் முடிவு எடுக்கவில்லை.
பாராளுமன்ற தெரிவுக்குழு இனப்பிரச்சினைக்குரிய தீர்வு காண்பற்கான ஒருவழி என அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்புமற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற இனப்பிரச்சினையுடன் தொடர்பான கட்சிகள் அதில் இடம் பெற வேண்டும் ஏற்கனவே பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ள வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை இதுவரை இடமளிக்கப்படவில்லை.
குறித்த விடயம் தொடர்பாக அரசாங்கமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் பேச வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதித்துவத்தை தானாகஅறிவிக்கும் உரிமை தனக்கு இல்லை என அரசாங்கம் நினைத்திருக்கலாம்.
அல்லது ஒரு தடவை ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பைஅழைத்தது போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கௌரவத்தோடுஅழைக்க வேண்டும் என்று அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் ஆலோசிக்காமல் பெயர்களை வெளியிடாமல் இருந்திருந்தால் அதுகுற்றமல்ல ஆனால் இது பற்றி பேச வேண்டும்.
30 வருட இனப்பிரச்சினை வரலாற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் இனப்பிரச்சினை பங்காளியாகவும் முஸ்லிம்களின் குரலாகவும் ஒலிக்கின்றது. இந்த வரலாற்று பயணத்தின் மூலம் அனுபவங்களைப் பெற்றுள்ளது.
கடந்த கால வரலாற்றில் சிங்கள தலைவர்கள் கொடுத்ததை தமிழ்தலைவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. தமிழ் தலைமைகள் கேட்டதைசிங்கள தலைமைகள் வழங்க முன்வர வில்லை என்ற வரலாற்றுப் படிப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்க்கு உண்டு.
இனப்பிரச்சினைக்கான தீர்வு முன் மொழியப்படும் என கருதப்படும் இந்தசந்தர்ப்பத்தில் சரியான தளமும் களமும் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு உண்டு. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இதற்காக அரசுடன் மட்டுமல்ல, அதன் பங்காளி கட்சிகளுடனும் தமிழ் தேசியகூட்டமைப்பு மற்றும் ஐ.தே. கட்சி உட்பட சகல தரப்புடனும் கலந்துரையாட வேண்டியுள்ளது.
தெரிவுக் குழுவில் அங்கம் பெற்றுள்ள ஏனைய முஸ்லிம் கட்சிகளையும் இணைந்து எமது பணி தொடர வேண்டும். தற்போதைய நிலையை பொறுதத்த வரை தெளிவான சிந்தனை நீரோட்டம் மற்றும் அரசியல் பார்வையுடன் முடிவு எடுக்கும் சந்தர்ப்பம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்க்கு காத்திருக்கின்றது.
அரசாங்கத்துடனான உறவு என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடனானஉறவு என்பதும் சரியான பரிசீலனை செய்யப்பட்டு ஆகுமா ஆகாதா என புடம்போட்டு பார்க்கும் காலம் வந்து விட்டது என தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இனப் பிரச்சினை தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றிநடந்த வரலாறு இல்லை. அப்படி இல்லாமல் இருக்கவும் முடியாது என்றும்அவர் மேலும் தெரிவித்தார்.
ஓட்டமாவடி காழி நீதிபதியும் சட்டத்தரணியுமான எம்.பி.எம்.ஹூஸைன் தலைமையில் இடம் பெற்ற கட்டிடத் திறப்பு விழா நிகழ்வில் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அதிதகளாக கிழக்குமாகாண அமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல், ஓட்டமாவடி பிரதேச சபை பதில் தவிசாளர் ஏ.எம்.நௌபர், மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நீதி அமைச்சின் 44லட்சம் ரூபா செலவில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மாஞ்சோலைப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்கான காழி நீதி மன்றத்திற்கு நிரந்தரக் கட்டிடம் இல்லாமல் இது வரைகாலமும் தனியார் கட்டிடங்களிலயே இயங்கி வந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.



நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஆதரவு வழங்காத அனைவரும் ஜனநாயக விரோதிகள்: கெஹலிய
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 05:16.39 AM GMT ]
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஆதரவு வழங்காதவர்களை ஜனநாயக விரோதிகள் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எல்லாக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். அவ்வாறு ஆதரவளிக்காதவர்கள் அனைவரும் ஜனநாயக விரோதிகளே.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் முதல் அமர்வு வரும் ஜுலை 9ம் திகதி நடைபெறவுள்ளது.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான சர்ச்சைகளுக்கு ஜனநாயக முறையில் தீர்வு காண்பதற்கே அரசாங்கம் தெரிவுக்குழுவை நியமித்துள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும். எனவே
இவ்வமர்வில் அனைத்துக் கட்சிகளுக்கும் பங்குபற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten