தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 juni 2013

சாட்சிகளை மிரட்டிய வாஸ் குணவர்த்தன மனைவி - நீதிமன்றில் ஆஜராகப் பணிப்பு!

13வது திருத்த சட்ட மூலத்தினை அகற்றும் நடவடிக்கையை எதிர்க்கிறேன்: முரளிதரன்
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 05:14.17 AM GMT ]
13வது திருத்த சட்ட மூலத்தினை அகற்றும் நடவடிக்கையை நான் எப்போதும் எதிர்க்கின்றேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி தெரிவி்த்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பட்டிருப்பு தேசிய பாடசாலையில் மூன்று மாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பட்டிருப்பு தேசிய பாடசாலையில் விஞ்ஞான ஆய்வுகூடம் உட்பட மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் பொன்.வன்னியசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக பட்டிருப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம்,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் சுகுணன் உட்பட கல்வித்திணைக்கள அதிகாரிகள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.
மகிந்த சிந்தனையின் தேசிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் சுமார் மூன்று கோடியே எழுபது இலட்சம் ரூபா செலவில் இந்த பாடசாலைக்கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.
கடந்த காலத்தில் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கட்டிடங்களை அமைத்துதறுமாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து பாடசாலைக்கான மூன்று மாடிக்கட்டிடம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
படுவான்கரை மற்றும் எழுவான் கரை பிரதேச மாணவர்களின் மிக முக்கிய பாடசாலையாகவுள்ள இந்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த கட்டிடம் பெரும் வரப்பிரசாதம் ஆகும்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இன்று தமிழர்கள் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் தங்களை பலப்படுத்த வேண்டும். அதன் மூலமே நாங்கள் பலம்பெற்று சமூகமாகமாற முடியும்.
எங்களை இங்கிருந்து யாரும் அகற்றமுடியாது. குடியேற்றங்களை செய்யமுடியாது. நாங்கள் பலம்பெரும்போதே நாங்கள் எம்மை பலப்படுத்திக் கொள்ளமுடியும்.
பாடசாலைகளில் தொழில்நுட்பட கல்வியை அறிமுகம் செய்யும் திட்டத்தின் கீழ் முஸ்லிம் பாடசாலைகள் மட்டுமே உள்ளீர்க்கப்பட்டிருந்தன.
இது தொடர்பில் கல்வியமைச்சரை சந்தித்து எனது ஆட்சேபனையை தெரிவித்தேன். நாங்கள் முஸ்லிம் பாடசாலைகளை உள்ளீர்த்ததை எதிர்க்கவில்லை. அதில் தமிழ் பாடசாலைகளை உள்ளீர்க்காமை தொடர்பிலேயே எனது ஆட்சேபனையை தெரிவித்தேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீதமானவர்கள் தமிழர்கள் உள்ளபோது ஒரு தமிழ் பாடசாலை கூட உள்ளீர்க்கப்படாதமை தொடர்பில் கல்வியமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தபோது அது தொடர்பில் உடனடியாக நடவடிக்கையெடுக்குமாறு செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
இதன் கீழ் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் இந்த தொழில்நுட்ப கல்வி பாடத்தினை அறிமுகம் செய்வதற்கு கல்வி அமைச்சு அனுமதியளித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதற்காக பட்டிருப்பு தேசிய பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் வறுமையான மாவட்டமாகவுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்து வளங்களும் கொண்ட இந்த மாவட்டத்தில் இந்த நிலையேற்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


சாட்சிகளை மிரட்டிய வாஸ் குணவர்த்தன மனைவி - நீதிமன்றில் ஆஜராகப் பணிப்பு
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 06:27.38 AM GMT ]
பம்பலப்பிட்டி, கோடீஸ்வர வர்த்தகர் படுகொலை தொடர்பான வழக்கின் சாட்சிகளை மிரட்டிய பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்த்தனவின் மனைவிக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் சியாம் என்பவரைக் கடத்திச் சென்று கப்பம் பெற்ற பின்னர் அவரைப் படுகொலை செய்ததாக பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது வழக்கின் சாட்சிகளுக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்ததனவின் மனைவி தொலைபேசி வாயிலாக அச்சுறுத்தல் விடுத்து வருவதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து வாஸின் மனைவி சியாமலி பெரேராவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்த்தனவின் சார்பாக சட்டத்தரணி பத்திரண ஆஜராகியுள்ளார்.
இதுகுறித்து பிபிசி செய்திச் சேவையிடம் கருத்து தெரிவித்த அவர், வாஸ் குணவர்த்தன பொலிஸ் திணைக்களத்தின் உரிமையாளர் அல்ல என்றும், அவர் கடமையிலிருந்த போது குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பின் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகளும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten