வேல்ஸ் தலைநகர் காடிஃபில் நடைபெற்ற கிரிகெட் அரை இறுதிப் போட்டியில் விளையாடிய இலங்கை அணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஈழத் தமிழர்கள் பலர் போராட்டம் நடத்தியிருந்தார்கள். இப் போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர் ஸ்ரீலங்காவின் சிங்கக் கொடியை காலில் போட்டு அதனை ஒரு காப்பெட் போல பாவித்தார்கள். சிலர் அதனை எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்கள். சிங்கக்கொடியை காப்பெட் போல பாவித்த தமிழர்களை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக ஜாதிக ஹெல உரிமைய தெரிவித்துள்ளது. அத்தோடு இக் கிரிகெட் போட்டியை காணவந்த சிங்களவர்கள் சிலர், ஓவல் மைதானத்தில் நாங்கள் தந்த அடி போதாதா என்று கேட்டு நையாண்டி செய்தார்கள். சில சிங்களப் பெண்மணிகள், தாம் பெண்கள் என்பதனைக்கூட மறந்து தமிழ் தூசனச் சொற்களால் தமிழர்களைப் பார்த்து திட்டினார்கள்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த தமிழர்கள் சிலர் சிங்களவர்களை தாக்கினார்கள். இத் தமிழர்களை கைதுசெய்யவேண்டும் எனவும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் கைதுசெய்யவேண்டும் என சிறுபிள்ளைத்தனமாக ஜாதிக ஹெல உரிமைய கோரிக்கை விடுத்துள்ளது. பல துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு கொழும்பில் விநியோகித்து வருகிறது. இதன் அமைப்பாளர் சிலர் மகிந்தரிடம் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்களா. மகிந்தர் பிரித்தானிய அரசிடம் இது குறித்து பேசவேண்டும் என்று ஜாதிக ஹெல உரிமைய மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten