தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 juni 2013

ரணில் எழுதிய நூல் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியமைக்கு ஐ.தே.க எதிர்ப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பு - ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடல்
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 03:55.28 PM GMT ]
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு குழுவினரும், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி குழுவினரும் சந்தித்து தீவிர கலந்தாலோசனை ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பு தெஹிவளையில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் இல்லத்தில் இன்று மாலை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.
இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக தலைவர் இரா. சம்பந்தன், பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் எம்பி, சுமந்திரன் எம்பி, கே. சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் தலைவர் மனோ கணேசன், உதவி பொதுச்செயலாளர் சண். குகவரதன், ஊடக செயலாளர் பாஸ்கரா சின்னத்தம்பி, நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது 13ம் திருத்தம், வட மாகாணசபை தேர்தல் ஆகியவை தொடர்பாக தமிழ், முஸ்லிம் கட்சிகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் பற்றி ஆராயப்பட்டன.
அதேபோல் சிங்கள முற்போக்கு மற்றும் ஜனநாயகக் கட்சிகளுடன் பொது இணக்கப்பாட்டுக்கு வருவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

ரணில் எழுதிய நூல் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியமைக்கு ஐ.தே.க எதிர்ப்பு
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 04:04.39 PM GMT ]
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க எழுதிய நூல் ஒன்று தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
2005ம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நூல் எழுதப்பட்டது.
முக்கியமான விடயங்களை விசாரணை செய்யாது புலனாய்வுப் பிரிவினர் இந்த நூல் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டை ஆட்சி செய்வதற்கு எவ்வாறு பௌத்த மதத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது பற்றியே இந்த நூலில் கூறப்பட்டுள்ளது.
எதற்காக புலனாய்வுப் பிரிவினர் நூல் குறித்து விசாரணை நடத்துகின்றார்கள் என்பது புரியவில்லை.
இந்த விசாரணை அரசியல் அமைப்பிற்கு முரணானது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நூலுக்கு Friedrich Naumann Foundation  என்ற ஜெர்மனிய அரச சார்பற்ற நிறுவனம் நிதி உதவி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten