தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 juni 2013

முஸ்லிம்கள் 2500 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு வந்தார்கள்: பிரதமர்

1எப்படி இது சாத்தியம்??ஏழாம் நூற்றாண்டில்(610,630)பிறந்த இஸ்லாம் மதத்தை சேர்ந்தோரே முஸ்லீம் எனில் இது சாத்தியமா??பிரதமர் என்ன பேசியுள்ளார்??
அஸ்ரப்.ஏ.சமத்: இந்த நாட்டில் வாழும் (அரபிகள்) முஸ்லிம்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்  இலங்கைக்கு வந்தவர்கள். இந்த நாட்டினை ஆக்கிரமிக்க வந்த வெளிநாட்டவர்களான  போத்துக்கேயருக்கு எதிராக கண்டி மன்னர்களது சிங்கள படைகளுடன் இணைந்து யுத்தம் செய்த வரலாறும் இந்த நாட்டின் வாழும் முஸ்லிம்களுக்கு உண்டு. என பிரதமர் தி.மு ஜெயரட்ன தெரிவித்தார் .
அது மட்டுமல்ல அவர்கள் சிங்கள அரசர்களுக்கு மருத்துவம் செய்து அவர்களது நோய்களை குணப்படுத்திய வரலாறும் உண்டு. அதற்காகவே முஸ்லிம்களுக்காக  அன்றைய மன்னர்கள் கண்டி  கம்பளை போன்ற இடங்களில் பள்ளிவாசல் நிர்மாணித்து  அவர்களுக்கு வாழ்வதற்கு இடம் வழங்கியுள்ளனர்.
சவுதி அரேபியாவில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச குர்ஆன்  மனனப்போட்டியில் 83 நாடுகளுடன் போட்டியிட்டு முதலிடத்தை பெற்ற  ஹாபீஸ் எம். ஆர்.எம். றிஸ்கானை   பிரதமர் தி.மு. ஜெயரட்ன அவர்கள்  பாராட்டி கௌரவிக்கு நிகழ்வு நேற்று நடைபெற்றது.இவ் வைபவத்திலேயே பிரதம மந்திரி தி.மு.ஜெயரட்ன கலந்த கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடாந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது-ஆகவேதான் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை பெரும்பாண்மையான நாம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் . அவர்களுக்கு இந்த நாட்டில் வாழ்வதற்கு தமது மத அனுஸ்டானம் போன்ற சகல உரிமைகளும் அனுபவிப்பதற்கு  உரிமையுண்டு.  நான் கம்பளை மாவனல்லை போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் வந்தபோது நான் தணியே நின்று அவர்களுக்கு எவ்வித அசம்பாவிதம் வராமல் பாதுகத்தேன். கம்பளையில் இன்றும் முதியான்சலாகே இப்றாலெப்பை என்ற அரபு வைத்தியர்கள் பரம்பரையில் உள்ளனர்.
கம்பளை கண்டி போன்ற இடங்களில் சிங்கள மக்கள் என்றும் முஸ்லிம் கடைகளுக்கு சென்று பொருள்வாங்குவோம். அவர்கள் நம்பிக்கையாக நேர்மையாக வியாபாரம் செய்பவர்கள். ஹலால் என்பது அவர்களுக்கு உள்ள உரிமை அதனால் எமக்கு எவ்வித கெடுதலும் ஏற்படாது நான் கம்பளை சாஹிராக்கல்லூரியில் கற்றேன். எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர்.
மாணவன் றிஸ்கான் ;அரபு உலக நாடுகளுடன் குர்ஆன்  மனனப் போட்டியில் போட்டியிட்டு முதலிடத்தை பெற்றிருப்பது இந்த நாட்டின் உள்ள  முஸ்லிம் இனத்துக்கு  பெற்ற வெற்றி அல்ல முழு இலங்க்கைக்கும் பெற்றுக்கொடுத்த வெற்றியாகும்.  இம் மாணவனை நான் மிக விரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் அழைத்துச் சென்று அவரது ஆசிர்வாதத்தை பெற்றுக்கொடுப்பேன்.  எனவும்  தி.மு.ஜயரத்தின தெரிவித்தார்.
இந் நிகழ்வு பௌத்தசாசன மதவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு  முஸ்லிம் சமய திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம். ஷாமில் தலைமையில் நடைபெற்றது. சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, மேல்மாகாண ஆளுனர் அலவி மௌலானா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜிப் ஏ. மஜீத், பாராளுமன்ற உறுப்பினா; ஏ.எச்.எம்.அஸ்வர், ஈரான், சவுதி அரேபியா நாட்டின் தூதுவர் பௌத்த சாசன மதவிவகார அமைச்சின் செயலாளர் எம்.கே. பி. திசாநாயகக்க  மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு றிஸ்கானுக்கு பிரதம மந்திரி தி. முஃ ஜயரத்தினாவால் பொண்னாடை போற்றியும் நினைவுச் சின்னமும்  1 இலட்சம் ரூபா  நிதியும் வழங்கப்பட்டது.
21

Geen opmerkingen:

Een reactie posten