தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 juni 2013

கிளிநொச்சியில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரைத் தேடி இராணுவத்தினர் அட்டகாசம்! மக்கள் பதற்றம்!

இராணுவ உடைமையாகப் போகும் மாவீரர் துயிலும் இல்லங்கள்!
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 11:26.43 PM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவ உடைமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய அனைத்து சொத்துக்களையும் இராணுவ உடைமையாக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களாக இருந்த காணிகள், பயிற்சிக்காக பயன்படுத்திய இடங்கள், வீடுகள் என்பவற்றை அரச உடைமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் இராணுவ அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் புலிகளுக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகள், அச்சகங்கள், வாகனங்கள், வங்கிகளின் சேமிப்பு மற்றும் நிலையான வைப்புகள் என்பன அரச உடைமையாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புலிகள் பயன்படுத்திய காணிகள், வீடுகள் என்பவற்றையும் இராணுவ உடைமையாக்க கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன்பும் யாழ்ப்பாணத்தில் எள்ளங்குளம், கொடிகாமம், கோப்பாய், மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்துள்ள நிலத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரைத் தேடி இராணுவத்தினர் அட்டகாசம்! மக்கள் பதற்றம்!
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 12:19.04 AM GMT ]
கிளிநொச்சி - கண்ணகைபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த படுமோசமான தூசணப் பேச்சுக்களுடன் நுழைந்த இராணுவத்தினர் கூட்டமைப்பிற்கு இடம் கொடுத்த ரவி எங்கே எனக்கேட்டு அட்டகாசம் புரிந்துள்ளதுடன், அவரது வீட்டிற்கு முன்பாக தொடர்ந்தும் நடமாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி நகருக்கு அப்பாலுள்ள குறித்த கிராமத்தில் கடந்த வாரம் தமிழ்தேசிய கூட்டமைப்பி ன் ஏற்பாட்டில் துவிச்சக்கர வண்டிகளும், கற்றல் உபகரணங்களும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சி றீதரனால் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை ஒரு வாகனத்தில் ஆயுதங்களுடன் வந்த 20வரையான படையினர், மிகமோசமான தூசணம் பேசிக்கொண்டு கூட்டமைப்புக்கு இடம்கொடுத்த ரவி (கந்தையா கேதீஸ்வரன்) எங்கே என்று கேட்டிருக்கின்றனர்.
எனினும் அவர் வீட்டிலில்லாததனால் அவருடைய சகோதரனின் வீட்டிற்குச் சென்ற படையினர் அங்கும் வீட்டிற்குள் நுழைந்து மிக ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டு தேடியுள்ளனர்.
பின்னர் அவர் கிடைக்காததால் அங்கிருந்து சென்ற படையினர் இரவு 8.10மணி தொடக்கம் குறித்த கிராம அபிவிருத்தி சங்க தலைவரின் வீட்டினை மீளவும் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் பாதுகாப்பான இடமொன்றில் பாதுகாப்பாக தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த இராணுவத்தினருடன், ஈ.பி.டி.பி அமைப்பாளரும், கிராமசேவகருமான சபா, மற்றும் மல்லாகம் நீதிமன்றில் பணியாற்றும் செல்வம் என்பவரும் உடனிருந்ததுடன், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சிக்கினால் கொல்லுவோம் என்ற கோஷத்துடன் அவரைத் தேடி வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கண்ணகைபுரம் கிராமத்தில் இன்று காலை தொடக்கம் கடுமையான பதற்ற நிலை காணப்படுவதாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten