[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 02:00.16 PM GMT ]
தன்சானியாவில் மலேசியப் பிரதமர் நஜீப் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நடத்திய இருதரப்பு சந்திப்பொன்றின் போதே மகிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக த நியூ ஸ்ட்செய்ட் டைம்ஸ் பத்திரிகையை மேற்கோள் காட்டி கொழும்பு எக்ஸ்பிரஸ் செய்தி ஏடு தெரிவித்துள்ளது.
இலங்கையில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்படி சந்திப்பின்போது தனக்கு முறைப்படி அழைப்பு விடுத்ததாக பிரதமர் நஜீப் தெரிவித்தார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து அவசரப்பட்டு முடிவுகள் எதனையும் எடுக்காமல் இலங்கையில் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய நியாயமான மதிப்பீடொன்றை ஏனைய நாடுகளும் மேற்கொள்ளுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டார்.
கடந்த வாரம் தொடங்கிய சர்வதேச உச்சி மாநாடொன்றுக்கென இரு நாட்டுத் தலைவர்களும் தன்சானியாவில் தங்கியிருந்த போதே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பூங்கா அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கில் நிலங்களை விழுங்க அரசு புதிய திட்டம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 11:24.08 AM GMT ]
வடக்கில் எதிர்வரும் டிசம்பர் மாத்திற்கு முன்னர் தாவரவியல் பூங்காவை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக பொழுதுபோக்கு அமைச்சர் ஜயரத்ன ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த 27ம் திகதி அமைச்சர் ஜயரத்ன ஹேரத் பேராதனை தாவரவியல் பூங்காவைப் பார்வையிடச் சென்றபோது, அங்கு இடம்பெற்ற நிகழ்வின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்காற்றுகிறது. இந்நிலையில், முப்பது வருடகால யுத்தம் நிறைவு பெற்றுள்ள வட மாகாணத்தில் தாவரவியல் பூங்காவினை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இலங்கையின், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் தாவரவியல் பூங்காக்களை மேலும் அதிகரிப்பதற்கு உத்தேசித்தள்ளோம்.
ஹங்செல்லை, ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவிலை ஆகிய பகுதிகளிலும் தாவரவியல் பூங்காக்கள் அமைக்கப்படும்.
இந்த பூங்காக்களுக்குத் தேவையான மிருகங்களை ஜப்பான் கொரியா சீனா தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கமும் இராணுவமும் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விகாரைகள், இராணுவ தலைமையகங்கள் மற்றும் அரசின் தேவைகளுக்காக பயன்படுத்தி வரும் வேளையில், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது என்ற பெயரிலும் வடக்கிலுள்ள பொதுமக்களின் காணிகளை அபகரிக்க அரசு மற்றுமொரு உத்தியைக் கையாண்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten