தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 juni 2013

இலங்கைப் பிரச்சினையை திமுக மறந்து விடவில்லை! என்கிறார் கருணாநிதி!

அஸாத் சாலியின் வருகையை எதிர்த்து நேற்று ஓட்டமாவடியில் ஸ்ரீ.சு.கட்சியினர் ஆர்ப்பாட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 08:43.01 AM GMT ]
வாழைச்சேனை ஓட்டமாவடி பிரதேசத்திற்கு அஸாத் சாலியின் வருகையை எதிர்த்து ஓட்டமாவடி சுற்றுவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா கிளை அமைப்பாளர் எஸ்.ஏ.ஐ.றபீழ் தலைமையில் நேற்று சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
ஆக்கிரமிப்பாளர்களே! எமது இலங்கை திரு நாட்டை லிபியா சிரியா போன்று ஆக்கிவிடாதே என்ற தொனிப்பொருளில் இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றது.
நாட்டின் நிலையான சமாதானத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும், அவரது தலைமையிலான அரசாங்கத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் அஸாத் சாலி போன்றோர்களின் வருகையை முற்றாக எதிர்க்கின்றோம் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
இங்கு கலந்து கொண்டவர்களால் சமாதான சூழலில் வாழும் முஸ்லிம்களின் சமாதானத்தை சீர்குலைக்க வேண்டாம், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு கணக்கறிக்கை வழங்குவதற்காக கிழக்கு மாகாணத்திற்கு வருகிறீர், காத்தான்குடி பள்ளிவாயல் மீதான தாக்குதலுக்கு பொறுப்புக் கூறவேண்டிய LTTEயினரா? TNAயினரா? என பல வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கைப் பிரச்சினையை திமுக மறந்து விடவில்லை! என்கிறார் கருணாநிதி
[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 08:57.00 AM GMT ] [ தினமனி ]
மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவை காங்கிரஸ் ஆதரித்திருந்தாலும் அந்தக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் இதனால் இலங்கைப் பிரச்சினையை மறந்து விடவில்லை என்றும்   திமுக தலைவர் கருணாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆதரவு கேட்டுப் பெறப்பட்டது.
இதனால் இலங்கைப் பிரச்சினையை திமுக மறந்துவிட்டதாக சிலர் சொல்கின்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும், தேமுதிக, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளிடமும், பின்னர் காங்கிரஸ் கட்சியிடமும் ஆதரவு கேட்டது உண்மைதான்.
இதில் எந்தக் கட்சியிடமும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் மாநிலங்களவைத் தேர்தலையொட்டி மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் ஒரு சிலர் காங்கிரஸ் கட்சியோடு திமுக உறவு கொண்டுவிட்டது, இலங்கைப் பிரச்சினையைக் கைகழுவிவிட்டது என்றெல்லாம் வெறுப்பு அரசியல் செய்கின்றனர்.
13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யும் இலங்கை அரசின் முயற்சியை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று இப்போதும் திமுக வலியுறுத்துகிறது.
எனவே, இலங்கைப் பிரச்சினை வேறு. மாநிலங்களவைத் தேர்தல் வேறு. கூட்டணி என்பது வேறு.
ஆனால் அனைத்தையும் ஒன்றாக இணைத்து குழப்பம் விளைவித்துவிட சிலர் முயற்சிக்கின்றனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுக விலகியபோது, திமுகவின் மத்திய அமைச்சர்களும் விலகினார்கள்.
மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த காரணத்தால் திமுகவைச் சேர்ந்த யாரும் மத்திய அரசில் சேர்ந்துவிடவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten