தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 juni 2013

யாழ்.நாவாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு! கிழக்கு முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு!! பொலிஸார் சந்தேகம்

ஈ.பி.டி.பியின் காரைநகர் அலுவலகம் மீது தாக்குதல்- சிறிலங்கா சுதந்திரக் கட்சி- ஈபிடிபி: தேர்தல்கால யுத்தம் ஆரம்பம்
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 03:51.14 AM GMT ]
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் காரைநகர் அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9 மணியளவில் இடமபெற்றுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் காரைநகர் அலுவலக உறுப்பினர் கண்ணன் தொலைபேசி ஊடாக முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்.மாவட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஈபிடிபி கட்சிக்கும் இடையிலான �தேர்தல் கால யுத்தம்� ஆரம்பம்
யாழ்.மாவட்ட தேர்தல் களத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் ஈபிடிபி கட்சியினருக்கும் இடையிலான �தேர்தல் கால யுத்தம்� ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
யாழ்.தீவகப் பகுதியில் ஈபிடிபி அலுவலகத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டள்ளது. இந்த நிலையில் இன்று காலை ஈபிடிபி கட்சியின் முக்கிய தாக்குதல் உறுப்பினர்கள் யாழ்.கோவில் வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதாக கட்சி வட்டரங்கள் தெரிவித்துள்ளன.
எது எவ்வாறு இருப்பினும் பிடிபிக்கும் சுகந்திரக் கட்சிக்குமிடையில் வடமாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் கால யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவதானிக்க முடிகின்றது.
இரண்டு கட்சிக்குமிடையில் முரண்பாடுகள் வெடித்துள்ளதாக உள் அரசியல் பிரச்சனை என இது வர்ணிக்கப்படுகின்றதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

யாழ்.நாவாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு! கிழக்கு முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு!! பொலிஸார் சந்தேகம்
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 08:16.08 AM GMT ]
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியிலுள்ள காணியிலிருந்து சில வெடிபொருட்கள் நேற்று முன்தினம் காலை மீட்கப்பட்டநிலையில், அவ்வெடிப்பொருட்களை கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களினால் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
யாழில் விரைவில் வடமாகாண சபைத் தேர்த்தல் நடைபெறவுள்ள சூழலில் இந்த வெடிப்பொருட்கள் தேர்தல் களத்தில் பயன்படுத்துவதற்காக இங்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்னர்
யாழ். முஸ்லிம் வட்டாரம் ஆஸாத் வீதியிலுள்ள காணியிலிருந்தே இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டன.
காணி உரிமையாளரான பொலிஸ் உத்தியோகத்தர் கைவிடப்பட்டிருந்த பாழடைந்த கிணற்றினை சுத்தம் செய்துள்ளார்.
அதன்போதே உரப்பையில் இடப்பட்ட நிலையில் ஷல் ரக வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக அண்மையிலுள்ள இராணுவ முகாமிற்கு அறிவித்ததை அடுத்து, இராணுவத்தினரால் அந்த வெடிப்பொருட்கள் இராணுவ பொறியியல் பிரிவிடம் கையளிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
இந்த வெடிப்பொருட்கள் நாட்டு வெடிப்பொருட்கள் ரகத்தை ஒத்திருப்பதாகவும், இது தொடர்பில் விசாணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் யாழ்.பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்


Geen opmerkingen:

Een reactie posten