[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 09:31.16 AM GMT ]
இந்த கூட்டத்தின் மண்டப மேடையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போதே கட்சித் தலைவர் மற்றும் தவிசாளர் ஆகியோரிடையே இந்த வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். இந்த வாய்த்தர்க்கம் சுமார் 15 நிமிடங்கள் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.
அதாவது வட மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸானது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடனேயே இணைந்து போட்டியிட வேண்டும். அவ்வாறில்லாமல் தனித்து போட்டியிடுவதென்றால் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என அமைச்சர் பஷீர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உறுதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்தால் உறுதியாக அரசோடு இருக்க முடியாது. உறுதியாக அரசோடு இருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் உறுதியா இருக்கமுடியாது. முஸ்லிம் காங்கிரசுடனும் அரசாங்கத்தோடும் ஒன்றாக இருந்தால் அரசின் பங்காளிக்கட்சி என்ற அடிப்படையில் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்ற முடியாது இது தான் நான் கண்ட அனுபவமாகும்.
இவ்வாறான நிலையில் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டால் அரசாங்கத்திற்கு எம்மீது நம்பிக்கையின்மை ஏற்படும்.
தேர்தல்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனித்துப் போட்டியிடலாம். காரணம் அவர்கள் எப்போதும் எதிர்க்கட்சியினரே. ஆனால் நாம் அரசாங்கத்துடன் இருந்துகொண்டு தனித்து போட்டியிடுவது நல்லதல்ல. இதனால் வட மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதென்றால் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்" எனவும் அமைச்சர் பஷீர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்புடன் இணைந்த நிலையிலேயே கல்முனை மாநகர சபை மற்றும் கிழக்கு மாகாண சபை தேர்தல் ஆகியவற்றில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
இதனால் வட மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடியும். இதற்காக அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ஹக்கீம் பதிலளித்துள்ளார்.
இதனையடுத்தே அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இத்தருணத்தில், உங்களுக்கு என்மீது நம்பிக்கை இல்லை. இதனால் நான் எப்படி உங்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் என அமைச்சர் பஷீர், கட்சி தலைவரிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு, உங்களை எப்படி நம்புவது. கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது கட்சியின் அனுமதியின்றி பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தீர்கள். தற்போதும் கட்சியின் அனுமதியின்றி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை பெற்றுள்ளீர்கள். இப்படி கட்சிக்கு துரோகமிழைத்துள்ள நிலையில் உங்களை எப்படி நம்புவது என அமைச்சர் ஹக்கீம் பஷீரின் கருத்துக்கு பதிலளித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் கடுமையாக முற்றியுள்ளது. இதனால் கட்சியின் அதியுயர் பீட கூட்டம் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படாமல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
தமிழ் விவசாயிகள் மீதான தாக்குதல்! பொலிஸார் பக்கச்சார்பின்றி விசாரணை செய்யவேண்டும்: கோவிந்தன் கருணாகரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 09:44.37 AM GMT ]
வாழைச்சேனை வாகனேரி பகுதியில் தமிழ் விவசாயிகள் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட வகையிலான தாக்குதல் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பின்றி விசாரணை செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
வாகனேரி பொத்தானைப் பகுதியான தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் பகுதியாகும். அப்பகுதியில் இரு சமூகத்தினரும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் விவசாயிகள் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் சில அரசியல் சக்திகளும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இனமுரண்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் சுயலாபம் அடையும் வகையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கருதும் வகையில் உள்ளது.
கடந்த 30 வருடகால யுத்தத்தின்போது இப்பகுதி தமிழ் விவசாயிகள் பல துன்பங்களிலும் துயரங்களினாலும் அனைத்தையும் இழந்து இன்று ஓரளவு தங்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும்போது அவர்கள் மீது திட்டமிட்ட மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
தாக்குதலுக்குள்ளான விவசாயிகளுக்கு நீதியையும் நியாயத்தினையும் பெற்றுக்கொள்ள பாதுகாப்பு தரப்பினர் பக்கச்சார்பின்றி நடவடிக்கையெடுக்க வேண்டும்.அத்துடன் இது தொடர்பில் இன முரண்பாடுகளை ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் ஏற்படாத வகையில் செயற்படவேண்டியது எமது பொறுப்பாகும்.
அத்துடன் இந்த சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஸ்ட ஈடுகளை பெற்றுக்கொடுக்க உரியவர்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும்.
மீண்டும் ஒரு முறை தமிழ் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அனுமதிக்காத வகையில் அனைத்து தரப்பினரும் செயற்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten