[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 04:13.13 PM GMT ]
இந்த தாக்குதல் காரணமாக 22பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை எழுத்தறிவு உள்ளவர்களின் வீதத்தில் மிகவும் உச்சத்தில் இருக்கின்ற போதிலும், அங்கு சில பகுதிகளில், இன்னமும் ஆரம்ப பள்ளிக்கூட மட்டத்திலேயே கல்வியை பாதியில் கைவிடும் சிறார்கள் கணிசமாக இருப்பதாக யுனிசெப் அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாகனேரி பொத்தானைப்பகுதியில் உள்ள கொழுவாமடு விவசாய கண்டப்பகுதியில் பல காலமாக தமிழர்கள் விவசாயம் செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் யுத்தம் நிறைவுபெற்ற பின்னர் இப்பகுதியில் உள்ள காணிகளை பிடித்தும் பலரிடம் ஆசை வார்த்தை காட்டி காணிகளை வாங்கியுள்ள முஸ்லிம்கள் சிலர் இப்பகுதியில் தமிழர்களின் விவசாய நடவடிக்கைகக்கு தடைகளை ஏற்படுத்திவருவதுடன் அவர்களுக்கான நீர் விநியோக நடவடிக்கைகளையும் தடுத்துவந்தனர்.
இது தொடர்பில் கடந்த ஆண்டும் இரு சமூகங்களுக்கும் இடையில் இது தொடர்பில் இப்பகுதியில் முறுகல் நிலையேற்பட்டு இராணுவத்தின் தலையீட்டின் காரணமாக அந்த முறுகல் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று அப்பகுதிக்கு சென்ற பெருமளவான முஸ்லிம் குண்டர்கள் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதன்போது 22 விவசாயிகள் காயமடைந்த நிலையில் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 17பேர் சிகிச்சை பெற்று சென்றுள்ள நிலையில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர்,
தமது பகுதிக்கான தண்ணீர் வரும்பகுதியை சில முஸ்லிம் விவசாயிகள் அடைத்துவைத்து தமது பகுதிக்கு அதனை திரும்பியிருந்தனர்.இதனை திறந்துவிடுமாறு பல்வேறு தடவைகள் கோரியபோதிலும் நடவடிக்கையெதுவும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் பல தடவைகள் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தபோதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்,தண்ணீர் இல்லாத காரணத்தினால் எமது விவசாய நடவடிக்கைகள் முடங்கிப்போகின.
இதனை கருத்தில்கொண்டு இன்று அப்பகுதியில் விவசாயம் செய்யும் நாங்கள் அப்பகுதிக்கு சென்று தண்ணீர் கட்டப்பட்டுள்ள பகுதியில் திறந்துவிட முயற்சி செய்தோம்.
இந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த பெருமளவானோர் எம்மீது தாக்குதல் நடத்தினர்.தாக்குதல் நடத்தியவர்களில் அதிகமானோர் அப்பகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்.அவர்கள் விவசாய நடவடிக்கைகளில் அப்பகுதியில் ஈடுபடுவதில்லை.திட்டமிட்ட வகையிலேயே எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்குதல் நடத்துவதன் மூலம் இப்பகுதியில் உள்ள காணிகளை தமிழர்கள் விற்றுவிட்டுச்செல்வார்கள் என அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை தாக்குதல் நடத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன் அக்கட்சியின் பொருளாளர் தேவராஜன் உட்பட பலர் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.
இலங்கையில் பாதியிலே கல்வியை கைவிடும் சிறார்கள் கணிசமாக உள்ளனர்!- யுனிசெப் அமைப்பு
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 03:04.56 PM GMT ]
இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் யுனிசெப் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, இலங்கையில் ஏனைய நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களை விட மலையக தோட்டப் பகுதியைச் சேர்ந்த பிள்ளைகளே அதிகமாக தமது கல்வியை ஆரம்ப பள்ளிக்கூட மட்டத்திலேயே கைவிடுவதாக தெரியவந்துள்ளது.
பள்ளியைக் கைவிடும் சிறார்களைப் பொறுத்தவரை அவர்களது ''பால்'' இந்த விடயத்தில் பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தவில்லையாயினும், மலையக தோட்டங்களில் ஆண் பிள்ளைகளை விட பெண் குழந்தைகளே அதிகமாக ஆரம்ப பள்ளிக்கூட மட்டத்திலேயே தமது கல்வியை கைவிடுவதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.
அத்துடன் வறிய பிள்ளைகளே அதிகமாக தமது படிப்பை பாதியில் கைவிடுவதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
சமூக பொருளாதாரக் காரணங்களே பல சந்தர்ப்பங்களில் 5-15 வயது வரையிலான பிள்ளைகள் கணிசமான அளவில் பள்ளிக்கூடக் கல்வியை பாதியில் கைவிடுவதற்கான காரணமாக இருப்பதாகவும் யுனிசெப்பின் ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது.
சிறுபிள்ளைகள் சிறார் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுதல், தாயார் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போதல் ஆகியவையும் இதற்கான ஒரு காரணமாக இருக்கின்றது.
பள்ளி வசதிகள் இல்லாமை, பள்ளிக்கூட உட்கட்டமைப்பு சரியாக இல்லாமை, ஆசிரியர்கள் வசதியீனம், வலது குறைந்த பிள்ளைகளுக்கான ஏற்பாடுகள் போதாமை ஆகியனவும் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தை பாதியிலேயே விட்டு வெளியேறக் காரணமாகின்றது.
பெற்றோரின் போக்கு, அரசியல் அர்ப்பணிப்பு இன்மை, கல்வி முறைமை அரசியல் மயமாக்கப்படுதல், கல்வி விநியோகத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்படாமை ஆகியவையும் இந்த விடயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
92.3 வீதம் கல்வியறிவைக் கொண்ட இலங்கையில் அதனை 100 வீதமாக மாற்றுவதே தமது இலக்கு என்று கூறியுள்ள இலங்கையின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள், வறுமை, பெற்றோர்களின் கல்வி அறிவீனம், தூர இடங்களில் பள்ளிக்கூடங்கள் அமைந்திருத்தல், பிள்ளைகளில் காணப்படும் பலவிதமான உடற் குறைபாடுகள் பள்ளிகளை விட்டு குழந்தைகள் பாதியில் வெளியேறுவதற்கான காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்த விடயத்தில் ஆசிரியர்கள் சிறந்த பங்களிப்பைச் செய்ய முடியும் என்று கூறியுள்ள அவர், அவர்களுக்கு மேலதிக பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten