[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 12:57.39 AM GMT ]
இந்நிலையில் அங்குள்ள இரகசிய கமராவில் இருவர் பேஸ்பால் பேட்டை வைத்துக் கொண்டு கோவிலின் ஜன்னல்களை உடைத்து விட்டு பேட்டை தூக்கி எறிந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இது இன ரீதியிலான வெறுப்புணர்விலேயே நடந்து இருக்கலாம் என்று அங்குள்ள இந்துக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், சர்ரே போலீசார் இன ரீதியிலான வெறுப்பு உணர்வாக தோன்றவில்லை, இது தனிப்பட்ட முறையிலான ஒரு தாக்குதலாக தெரிவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இருந்தும் இந்த தாக்குதலுக்கு குடியுரிமை அமைச்சர் ஜெசன் கென்னி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நன்றி கனடாமிரர் (www.canadamirror.com)
19 வது அரசியல் அமைப்பு நல்லிணக்கத்தை பாதிக்கும்!- கொழும்பு ஆங்கில ஊடகம்
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 01:22.49 AM GMT ]
இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 13 க்கு பதிலாக 13 பிளஸ் என்ற அரசியல் அமைப்பை கொண்டு வரப்போவதாக இந்தியாவிடம் உறுதியளித்திருந்தார்.
எனினும் கோத்தபாய ராஜபக்ச, இலங்கையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றே காணப்படவேண்டும் என்று கூறிவருகிறார்.
இதன் அடிப்படையில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் என்ற மாகாண சபையின் அதிகாரங்கள் நீக்கப்பட்டு, அத்துடன் இரண்டு மாகாண சபைகள் ஒன்றிணைவது தடுக்கப்பட்டு, 19 வது அரசியல் அமைப்பு கொண்டு வரப்படுவதாக அந்த ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
எனவே அது இலங்கையில் நல்லிணக்கத்தை பாதிக்கும் என்றும் குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை அடுத்த வாரத்தில் 19 வது அரசியல் அமைப்பு திருத்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten