[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 12:34.11 AM GMT ]
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இராணுவங்களுக்கு இடையில் உள்ள உறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தானிய கூட்டுப்படை தளபதி ஜெனரல் கயானி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தியத்தலாவையில் நேற்று நடைபெற்ற இராணுவ அணிவகுப்பின் பின்னர் கருத்துரைத்த அவர்,
இலங்கையும் பாகிஸ்தானும் இராணுவ ஒத்துழைப்புகளில் முன்னிலை வகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையும் பாகிஸ்தானும் சமாதானத்தை விரும்பும் நாடுகளாகும்.
எனவே சமாதானத்தை கருதி பிராந்திய ரீதியில் இராணுவத்தை வலுவுள்ளதாக வைத்திருக்கவேண்டிய அவசியம் உள்ளதாக தளபதி ஜெனரல் கயானி தெரிவித்துள்ளார்.
இதன்போது நாடுகளின் இறைமை பாதிக்கப்படக்கூடாது என்றும் கயாணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் 30 வருடபோரின் போது பாகிஸ்தான் இலங்கை இராணுவத்துக்கு உறுதுணையாக செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, பொதுநலவாய அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்பது ஆபத்தானது! டுபாய் ஊடகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 01:05.11 AM GMT ]
மியன்மாரில் ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்புவதில் சர்வதேச நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், மற்றொரு ஆசிய நாடான இலங்கையில் ஜனநாயகம் அழிந்து போவது, உலக நாடுகளின் கண்களுக்கு புலப்படவில்லை எனவும் இது ஆபத்தானது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் இலங்கை அரசாங்கம் செய்த குற்றங்களை கண்டுகொள்ளாதது மாத்திரமின்றி, அதற்கு கைமாறு செய்யும் நிலைமை காணப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை இந்தியா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஜனநாயக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மாநாட்டிற்கு பின்னர், பொதுநலவாய அமைப்பின் தலைமைத்துவத்தை அடுத்த இரு ஆண்டுகளுக்கு இலங்கை பொறுப்பேற்கும் பட்சத்தில், உலக விவகாரங்களில் தலையீடு செய்யும் அதிகாரத்தை பொதுநலவாய அமைப்பு கொண்டுள்ளது என்ற கருத்து முடிவுக்குக் கொண்டு வரப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten