தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 juni 2013

இலங்கையின் நிலை குறித்து விமர்சிப்பதைத் தவிர்க்கவும்: கமலேஷ் சர்மா!

பிரித்தானியப் பிரஜை கொலை வழக்கு: சாட்சிகளை மிரட்டுவதாக குற்றச்சாட்டு! வெளிநாட்டு சதி பலிக்காது: கொலைச் சந்தேகநபர்
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 10:47.29 AM GMT ]
பிரித்தானிய பிரஜை கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
குறித்த வழக்கின் சாட்சிகளை சந்தேநபர்கள் மிரட்டுவதாக கூறப்படுவதனாலேயே இந்த வழக்கை கொழும்பு நீதிமன்றுக்கு மாற்றியுள்ளதாக புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு சட்டமா அதிபர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க விசேட காரணங்களின் அடிப்படையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரித்தானியப் பிரஜையின் கொலை தொடர்பில் தங்காலை பிரதேச சபைத்தலைவர் உட்பட பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்களை நவம்பர் மாதம் 1ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25ம் திகதி தங்காலை பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் பிரித்தானிய பிரஜையான குரும் ஷேக் என்ற செஞ்சிலுவை சங்க தொண்டர் சேவையாளர் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2ம்இணைப்பு
வெளிநாட்டு சதி பலிக்காது: பிரிட்டிஷ் பிரஜை கொலைச் சந்தேகநபர்
இலங்கையில் பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேகநபரான ஆளுங்கட்சி அரசியல்வாதி, 'இலங்கை அரசை கவிழ்க்க எடுக்கப்படும் சர்வதேச முயற்சி பலிக்காது' என்று கூறியுள்ளார்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இலங்கை அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முடியாது என்றும் கொலை வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தங்காலை பிரதேச சபைத் தலைவரும் ஆளுங்கட்சி அரசியல்வாதியுமான சம்பத் பத்திரண ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்த வழக்கு முன்னர் தங்காலை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்த நிலையில், கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று அழைக்கப்பட்டது.
இந்த வழக்கின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் தங்காலை பிரதேசசபைத் தலைவர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் 8 பேருக்கு எதிரான இந்த வழக்கை கொழும்புக்கு மாற்ற வேண்டும் என்று சட்டமா அதிபர் விடுத்த வேண்டுகோளின்படியே விசாரணை கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த வழக்கை கொழும்பில் தொடர்ந்து விசாரிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பொலிசார் நீதவானிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதன்போது சந்தேகநபர்கள் சார்பான சட்டத்தரணி, தங்காலை பிரதேசசபைத் தலைவர் சம்பத் பத்திரண உத்தியோகபூர்வ வேலையாக வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அந்தக் கோரிக்கையை நிராகரித்த கொழும்பு நீதவான், பிணை வழங்கிய மேல்நீதிமன்றத்திடம் அது தொடர்பான கோரிக்கையை முன்வைக்குமாறு தெரிவித்துவிட்டார்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 1ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போதே, தன்மீதான குற்றச்சாட்டுக்களை நாட்டுக்கு எதிரான சர்வதேச சதி என்று சம்பத் பத்திரண விமர்சித்தார்.
தெற்கே, தங்காலையில் கடந்த 2011-ம் ஆண்டு நத்தார் பிறப்பன்று இரவு பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் கேளிக்கை விடுதியொன்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது நண்பியான வெளிநாட்டு யுவதியும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அப்போது கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் நிலை குறித்து விமர்சிப்பதைத் தவிர்க்கவும்: கமலேஷ் சர்மா
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 10:33.19 AM GMT ]
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து தூரத்தில் இருந்து விமர்சிப்பதை தவிர்த்து, நடைமுறைக்குச் சாத்தியமான மாற்றத்தை ஏற்படுத்த பொதுநலவாய நாடுகள் முயற்சிப்பதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையை கணிப்பதற்கு முன் நீங்கள் காத்திருக்கவும்” என்ற தலைப்பில் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை செயற்படுத்த இன்னும் பல திட்டங்களை செயற்படுத்த இலங்கை வேண்டியுள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கையானது, தங்களுக்கு சமாதானத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உள்நாட்டில் போட்டுக் கொண்ட பாதை அமைப்பு என கமலேஷ் ஷர்மா கூறியுள்ளார்.
பொதுநலவாய அமைப்பானது, மனித உரிமைகள், ஊடகத்துறை மற்றும் நீதித்துறை என்பற்றை மேம்படுத்தும் பொருட்டு இலங்கையில் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொய் சொல்பவன்,சம்பளம் வாங்குபவன் பிராமணனாக இருக்க முடியாதென்கிறது வேதம்!!இவருக்கு சர்மா என்ற பெயர் எதனால்??நல்ல விடயங்களுக்கு ஆரம்பிக்கப்படும் அமைப்புகளில் இப்படியான பொய்யர்களை தலைப்படுத்துவதனால் என்ன பிரயோசனம்??செலவே!!

Geen opmerkingen:

Een reactie posten