அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியா செல்கின்ற போதும், அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கையர்கள் மீண்டும் நாடுகடத்தப்படுகின்றனர்.
இலங்கையில் அவர்களுக்கு ஆபத்து இல்லை என்று அவுஸ்திரேலியா அறிந்துக் கொண்டிருப்பதாலேயே அவர்கள் நாடுகடத்தலுக்கு உட்படுகின்றனர்.
எனினும், இவ்வாறு அகதிகள் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் செல்வதால், இலங்கையில் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலை இல்லை என்ற பிழையான தோற்றம் உருவாகிறது. இது முற்றிலும் பிழையானது.
இலங்கையில் அனைத்து இனங்களும் பாதுகாப்பாக வாழ்கின்றனர். அந்த வகையில் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படுகின்றவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten