தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 juni 2013

லண்டனில் நடக்கும் பனிப்போர்: நேற்றும் சிங்களவர் மீது தாக்குதல் !

லண்டனில் நேற்று இரவு கொலின்டேல் பகுதியில் வைத்து சிங்கள இளைஞர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். லண்டன் ஓவல் மைதானத்தில் தமிழர்கள் மீது வசைபாடிய கனிஷ்க பெரேரா என்பவரின் நண்பர்கள் சிலர் நேற்று கொலின்டேல் பகுதியில் உள்ள மது அருந்தும்சாலை(பப்) முன்னால் கறுப்பு நிற BMW வாகனத்தில் நின்றுள்ளார்கள். இவர்களை அடையாளம் கண்ட நபர் ஒருவர், தமது நண்கபர்களுக்கு தொலைபேசியூடாக தகவலைத் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறிப்பிட்ட இச் சிங்களக் கும்பல் பிறிதொருவிடையமாக அங்கே ஒரு தமிழரைக் காணவே வந்திருந்தார்கள் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. இருப்பினும் அதற்கு முன்னதாகவே இச் சிங்களக் கும்பல் மீது இனந்தெடியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

தாக்குதல் நடத்திய இக் இக் குழுவினர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடித் தப்பிவிட்டார்கள் என்று சம்பவத்தை நேரில் பார்த்த தமிழர் ஒருவர் அதிர்வு இணையத்துக்கு தெரிவித்தார். லண்டன் ஓவல் மைதானத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், தமிழர்கள் மீது வசைபாடியவர்கள், மற்றும் தமிழ் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்று அனைவரது போட்டோக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்தோடு அவர்கள் வசிக்கும் இடம் மற்றும், வேலைசெய்யும் தளங்களும் தமிழர்களால் அறியப்பட்டுள்ளது. இன் நிலையில் லண்டனில் ஒரு பனிப்போர் ஆரம்பமாகியுள்ளதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற சம்பவத்தில் ஒரு சுவாரசியமான விடையம் ஒன்று இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கனிஷ்க பெரேராவின் நண்பர்கள் தமிழர் ஒருவரை தாக்கவே அவ்விடத்தில் நின்றுகொண்டு இருந்திருக்கலாம் எனவுன், ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அவர்களே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


சிங்களவர் திட்டம் வெற்றி நோக்கி நகர்வது போலவே தெரிகிறது!!தமிழன் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு காரியத்தை கெடுக்கப்போகிறான் என்பது சில நாட்களில் தெரியவரலாம்!!சிங்களவன் மோடன் இல்லை என்பதை ஜெஆர் அன்று காட்டினார்,இன்று இங்குமா??

Geen opmerkingen:

Een reactie posten