தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 juni 2013

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது

பாடசாலை அதிபரின் உயிரைப் பறித்த கேணல் பயிற்சி! ஆசிரியர் சங்கம் அதிருப்தி
[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 08:18.17 AM GMT ]
ரன்தம்பே பயிற்சி முகாமில் கேணல் தர தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட ரன்தோளுகம பஞ்ஞானந்த தேசிய பாடசாலையின் அதிபர் டபிள்யூ.ஏ.எஸ் விக்ரமசிங்க உயிரிழந்துள்ளார். இவர் இன்று ஞாயிறு  காலை உயிரிழந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்த போதிலும், இச்சம்பவம் பாடசாலையில் இடம்பெறவில்லை எனவும் கேணல் பயிற்சியின் போதே இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து பாடசாலைகளிலும் உள்ள அதிபர்கள் 40 தொடக்கம் 50 வயதானவர்கள் எனவும் இவர்கள் கேணல் பயிற்சிக்கு எந்தவொரு உடற் தகுதியும் இல்லாத நிலையில் பயிற்சியில் இணைத்துக் கொள்வதே இவ்வாறான நிலைக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இன்னும் பல காலம் பாடசாலைக்கு பெரும் சேவையாற்றக் கூடிய, நாட்டின் பெறுமதி மிக்க அதிபர் ஒருவரை இப் பயிற்சி காரணமாக இழந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் கூறினார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் ரன்தம்பே பயிற்சி முகாமிற்கு பயிற்சிக்காக சென்ற 52 வயதான குறித்த அதிபர் இன்று ஞாயிறு காலை விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சிக்கு தயாரான நிலையில் சுகவீனமுற்று அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 08:05.42 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கிரான்குளம் விடுதி ஒன்றில் வைத்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதற்கு முயன்றார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் ஐந்து குடும்ப உறுப்பினர்களை காத்தான்குடிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் கிரான்குளத்திலுள்ள விடுதி ஒன்றில் வைத்து இரு ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை உட்பட ஆண்கள் மற்றும் பெண்கள் என ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யதுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் உறுத்திப்படுத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் கடற்கரையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முற்பட்ட 23 பேர் பொலிஸாரினாலும் இராணுவத்தினராலும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten