தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 juni 2013

கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் யாழ்.விஜயத்தை அரசாங்கம் தடுத்து நிறுத்தியது?

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இடமில்லை! தலைவர் நிமால் தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 02:30.45 AM GMT ]
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அரசாங்கத் தரப்பில் உள்ள எல்லாக் கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்க முடியாது என்று அமைச்சரும், அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பான ஆராய நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சபாநாயகரினால் நியமிக்கப்பட்டுள்ள 31 பேர் கொண்ட தெரிவுக்குழுவில், 19 பேர் அரசதரப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இடம்பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், லங்கா சமசமாசக் கட்சி ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா,
“31பேர் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அரசதரப்பில் 19 பேர் மட்டுமே இடம்பெற முடியும்.
சபாநாயகர் சமல் ராஜபக்சவின் விருப்பப்படியே அவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
அரசாங்கத்தில் பெரும் எண்ணிக்கையான கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
அவை எல்லாம் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்படவில்லை. அது நடைமுறைச் சாத்தியமில்லை.
ஆனால் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எல்லாக் கட்சிகளுக்கும், தெரிவுக்குழுவில் பிரதிநிதித்துவம் செய்யவும், யோசனைகளை சமர்ப்பிக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.
தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் வரும் ஜுலை 9ம் நாள் நாடாளுமன்றக் கட்டத்தொகுதியில் நடத்தப்படும்.
அதில் தெரிவுக்குழுவின் நிகழ்ச்சி அட்டவணை தயாரிக்கப்படும்.
ஐதேக, ஜேவிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன, இன்னமும் தெரிவுக்குழுவுக்கான பிரதிநிதிகளை நியமிக்கவில்லை.
அவர்கள் தமது பிரதிநிதிகளை நியமிக்காது போனாலும், குறிப்பிட்ட நாளில் தெரிவுக்குழு செயற்படத் தொடங்கும்.
கண்டிப்பாக ஜுலை 9ம் நாளுக்குப் பின்னர், தெரிவுக்குழுவுக்கு பிரதிநிதிகளை நியமிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் யாழ்.விஜயத்தை அரசாங்கம் தடுத்து நிறுத்தியது?
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 02:50.13 AM GMT ]
13வது திருத்தச் சட்ட விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கருத்து கூறிவரும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, யாழ்ப்பாணத்திற்கு நேற்று மேற்கொள்ளவிருந்த விஜயம் திட்டமிட்ட வகையில் அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பாஷையூரில் அமைக்கப்பட்ட இறங்கு துறையை அமைச்சர் திறந்து வைப்பதாக இருந்தது.
ஆனால் இறுதி நேரத்தில் அமைச்சரின் வருகை திட்டமிடப்பட்ட வகையில் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்தோடு அமைச்சரின் வருகை தடுக்கப்பட்டதால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகள் எவரும் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
குறிப்பாக அரச அதிகாரிகளுக்கு நிகழ்விற்கு போக வேண்டாம் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten