[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 08:17.44 AM GMT ]
கனடா வாழவைப்போம் அமைப்பு, எமக்கு உதவியளிக்க முன்வந்தமைக்கு எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு அந்த அமைப்பின் மனிதாபிமானப் பணிகள் தொடர நாம் தொடர்ந்தும் அவர்களுடன் செயற்படுவோம் எனப் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.
போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் குடும்பங்களுக்கான தொழில் வாய்ப்புகளின்றி இன்றுவரை வாழ்வாதாரத்திற்காகப் போராடும் குடும்பங்கள் ஒருபுறம்.
இன்று நாட்டில் தமிழர்களுக்கு எதிராக எழுந்துள்ள இனவாதத்தை முறியடிக்க அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் செயல்பாடு மகிழ்ச்சியளிப்பதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.
இக் குடும்பங்களிலிருந்து உயர்கல்விக்காகக் கொழும்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களாகிய நாங்கள் கல்வி கற்பதற்காகக் கடும் பிரயத்தனங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களாகிய நாம் யுத்த அழிவுகளை முழுமையாகச் சந்தித்தவர்கள்.
இந்த நிலையில் கனடா வாழவைப்போம் அமைப்பும் தன் மனிதாபிமானச் செயற்பாட்டில் எங்களுக்கான கடன் திட்டத்திற்கு உதவியுள்ளமை எமக்கு மிகுந்த ஆறுதல் தருகிறது.
கல்வியே கருந்தனமாகக் கொண்ட எம்மினம் இன்று எல்லா வழிகளிலும் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
இந்த நிலைகளை மாற்றி நாம் புதிய உலகத்தை அமைக்க வேண்டுமானால் கல்விக்காகப் பல எதிர் நீச்சல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.
போரிலே தமிழர்கள் அழிக்கப்பட்டபின், அவர்களின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டபின், மீள் குடியேறி வாழும் எம் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி, விதவைகளுக்கான உதவி , பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம், கற்றலுக்கான பண உதவி, மாற்று வலுவுடையோருக்கான பல்வேறுபட்ட உதவிகளைக் கடந்த மூன்று வருடங்களாக மனித நேயத்துடன் செய்து வரும் கனடா வாழவைப்போம் அமைப்பு, பல்கலைக் கழக மாணவர்களாகிய எமக்கும் இந்த உதவித் திட்டத்தை எமது படிப்பு முடியும் வரை ஆற்ற முன்வந்தமையை நாம் மிக நம்பிக்கையோடு வரவேற்று, எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு கனடா வாழவைப்போம் அமைப்பின் மனிதாபிமானப் பணிகள் தொடர நாம் தொடர்ந்தும் அவர்களுடன் செயற்படுவோம் எனப் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆக்கபூர்வமான செயல்பாடு மகிழ்ச்சியளிக்கின்றது!- பிரபா கணேன் எம்.பி.
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 07:36.41 AM GMT ]
மேலும் அவர் தெரிவித்ததாவது,
13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களை அரசாங்கம் கொண்டுவர தீர்மானித்திருக்கும் இந்நிலையில் அதற்கு எதிரான கருத்துக்களை கொண்டிருக்கும் கட்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதனடிப்படையில் எங்களுடனும் சில தினங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. கடந்த காலங்களில் இனப்பிரச்சினை தீர்விற்காக தனித்து நின்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தாலும் அவற்றில் வெற்றிகான முடியவில்லை.
இன்று சாணக்கியமான முறையிலே அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு அவர்கள் செயல்பட முன் வந்திருப்பது பாராட்டக்கூடிய விடயமாகும். இதனையே நான் ஒரு வருடத்திற்கு முன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தேன்.
இன்று சிங்கள இனவாதிகளின் கோஷங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பணிந்து போய்விடக்கூடிய கட்டத்தில் இருக்கின்றது. சுpங்கள பௌத்த இனவாத வாக்குகளை இழந்துவிடாமல் இருப்பதற்காக அரசாங்கம் ஏதாவது ஒரு சில மாற்றங்களையாவது 13வது திருத்த சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
அவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதற்காக எமது மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது.
முற்போக்கு சிந்தனை கொண்ட சிங்கள அரசியல் தலைவர்களை சந்தித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தாம் தமிழ் இனவாதத்தை தோற்றுவிப்பவர்கள் அல்ல என்ற விளக்கத்தை அவர்களுக்கு அளித்து அவர்கள் மூலமாக சிங்கள மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கத்தின் அவசியத்தை தெளிவுபடுத்த வேண்டிய செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் நாம் தெரிவித்தோம்.
வெறுமனே தமிழ் மக்கள் மத்தியிலே அதிகாரப் பரவலாக்கத்தின் அவசியத்தை நாம் பேசிக் கொண்டிருப்பதில் கிடைக்கப் போவது எதுவும் இல்லை. சிங்கள மக்கள் மத்தியிலே ஏற்படக்கூடிய மாற்றங்களே எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதே எனது நம்பிக்கையாகும்.
இந்திய வம்சாவளி மலையக மக்களைப் பொறுத்தவரையிலே மாகாணசபை முறைமையினால் எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்ற போக்கிலே நாம் இருந்து விட முடியாது. மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா பதுளை மாவட்டங்களில் கல்வி அபிவிருத்திக்கு மாகாண தமிழ் கல்வி அமைச்சு கிடைத்தமையினால் பல சேவைகள் செய்யக் கூடியதாக இருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது.
அதே போல் கொழும்பு மாவட்டத்திலும் கடந்த காலங்களில் மாகாணசபை உறுப்பினராக நான் இருந்த போது முதலமைச்சராக இருந்த ரெஜினோல்ட் குரே இப்போது பிரசன்ன ரணதுங்க ஆகியோர் மூலமாக கொழும்பு மாவட்ட தமிழ் பாடசாலைகளுக்கு பல கோடி ரூபாய் நிதிகளை பெற்று அபிவிருத்தி செய்யக்கூடியதாக இருந்தது.
இன்று கொழும்பில் இருக்கும் மூன்று தேசிய பாடசாலைகளுக்கு ஒரு சதமேனும் மத்திய கல்வி அமைச்சிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.
இவையணைத்தையும் பார்க்கும் பொழுது மாகாணசபை அதிகாரங்களில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு எந்தவொரு தென்னிலங்கை இந்தியவம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இவ்விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் இணைந்து செயல்படுவதே ஒரே வழியாகும்.
ஜனநாயக மக்கள் காங்கிரஸைப் பொறுத்தவரையில் அரசாங்கத்துடன் எந்த முரண்பாடும் எங்களுக்கு இல்லை. 13வது திருத்த சட்டத்தில் கை வைக்காத பட்சத்தில் மேல்மாகாண தமிழ் மக்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம்.
Geen opmerkingen:
Een reactie posten