தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 juni 2013

வடமாகாண ஆளுநர் சந்திரசிறிக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு ஏற்பு

கேப்பாபிலவில் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளில் 4 ஆயிரம் இராணுவக் குடும்பங்கள்
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 04:25.40 AM GMT ]
முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் பொது மக்களிடமிருந்து 2 ஆயிரத்து 26 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கு இலங்கை இராணுவம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
போர் முடிவுற்ற பின்னர் கோப்பாபிலவு பகுதியில் இராணுவத்தினரால் பெரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டது.
இதன் காரணமாகக் கேப்பாபிலவில் பொது மக்களின் காணிகள் உட்பட 2 ஆயிரத்து 26 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இதில் ஆயிரத்து 500 ஏக்கர் வரையிலான காணி, அரச காணி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 526 ஏக்கர் காணி தனியாருக்குச் சொந்தமானது.
4 ஆயிரம் இராணுவக் குடியிருப்புக்களை அமைப்பதற்காகவே மேற்படி காணியைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நில அளவைத் திணைக்களத்தினால் குறித்த காணிகளை அளவீடு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
வடமாகாண ஆளுநர் சந்திரசிறிக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு ஏற்பு
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 03:07.19 AM GMT ]
பூநகரிக் கோட்டத்தைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள், வட மாகாண ஆளுநர் சந்திரசிறிக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை ஏற்று விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆசிரிய இடமாற்றத்தின் போது இடமாற்றத் தகுதியிருந்தும் இடமாற்றம் வழங்கப்படவில்லை என்பதைக் கண்டித்தும் தேசிய இடமாற்றக் கொள்ளைக்கு புறம்பாக மாகாணத்தில் இடமாற்றக் கொள்ளை தயாரித்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இம்மனு கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை நேற்று விசாரித்து பிரதம நீதியரசர் சிராணி திலகவர்த்தன தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் மனுவினை விசாரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten