தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 juni 2013

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஈழத்தமிழரின் திரைப்படத்துக்கு உயர்விருது

மஹிந்த ராஜபக்ச நாடகம் ஆடுகிறார்! அவரைப்போல் யாருமே நடிக்க முடியாது!- விக்கிரமபாகு
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 06:31.16 AM GMT ]
13 பிளஸ் வழங்குவேன் என்று சர்வதேசத்திடம் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு இன்று 13 பிளஸ் என்றால் என்ன? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடகம் ஆடுகிறார். அவரைப்போல் நடிகர் யாருமே இருக்க முடியாது என்று நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
அத்துடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்பத்துவோம் என்று சர்வதேசத்திடம் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு இன்று நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை என்றால் என்ன? என்று நடிக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு, பான்ஸ் பிளேஸில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசியதாவது,

இந்தியாவினால் கொண்டுவரப்பட்ட 13 வது அரசியலமைப்பு திருத்தம், இலங்கைக்கு தேவையில்லையென்று விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவும் கூறுகின்றார்கள்.
ஆனால் இந்தியாவினால் இந்து நாட்டுக்குள் பௌத்த மதம் வந்தது என்பதை அவர்கள் அறியவில்லையா, பௌத்தத்தை போற்றி காக்கும் அவர்கள் ஏன் 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
இந்தியா உள்நாட்டு பிரச்சினையில் தலையீடு செய்யக்கூடாது என கூறுகிறார்களே, உண்மையில் அப்பிரச்சினையில் இந்தியா தலையிடாமல் வேறு யார் தலையீடு செய்வார்கள்?
இந்தியாவில் 80 வீதம் இந்துக்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் உள்ளனர். அந்த மக்கள் இந்த நாட்டில் அநீதியாக நடத்தப்பட்டால் இந்தியா தலையீடு செய்யும், செய்யத்தான் வேண்டும்.
இந்தியாவின் தலைமையில் வந்த 13 வது திருத்தத்தை இல்லாது செய்ய வேண்டமென கோருவது கேளிக்கையாகவுள்ளது.

13வது திருத்தம் என்பது உண்மையில் இந்தியாவினால் இங்கு கொண்டு வரப்பட்டதல்ல, அது வட்ட மேசை மாநாட்டின்போதே முன்வைக்கப்பட்ட ஒரு அம்சம், செல்வநாயகத்துடன் செய்து கொண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தமையாலேயே ஜே.ஆர். ஜெயவர்தன அவ்வாறு செய்துவிட கூடாது என்பதற்காகவே, இந்தியா முன்னின்று 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தியது.
அது இந்த நாட்டுக்கு தேவையான ஒன்று, அதனை இல்லாது செய்ய முயற்சிப்பது அநீதியான துரோக செயல் என்பதை அரசாங்கமும் அரசில் அங்கம் வகிக்கின்ற பங்காளி கட்சிகளும் உணர வேண்டும்.

திருமண பொருத்தம் பார்த்து, திருமணம் நிச்சயிக்கப்பட்டு அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னரே தேனிலவுக்கு சென்ற பின்னர், மீண்டும் பொருத்தம் பார்க்க வேண்டும் என மணப் பெண்ணின் அப்பா கூறுவது போலவே மஹிந்த ராஜபக்சவின் செயல் 13 வது திருத்தம் தொடர்பில் உள்ளது.
இது மிக வேடிக்கையான முட்டாள்தனமான செயலாகும், எனவும் அவர் தெரிவித்தார்.


ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஈழத்தமிழரின் திரைப்படத்துக்கு உயர்விருது
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 06:57.12 AM GMT ]
சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கனடா வாழ் ஈழத் தமிழர் ஒருவர் தயாரித்த திரைப்படமொன்றுக்கு உயர்விருது அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய் கலாசார சதுக்கத்தில் 16வது சர்வதேச திரைப்பட விழா அண்மையில் நடைபெற்று முடிந்தது.
இந்த திரைப்பட விழாவில் உலகெங்கிலுமிருந்து 1600க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலிருந்து 12 திரைப்படங்கள் உயர் விருதுக்கான இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருந்தன.
இதில் கனடா வாழ் ஈழத்தமிரான லெனின் எம்.சிவம் அவர்களது இயக்கத்தில் உருவான த கன் என்ட் த ரிங்க் ( A GUN & A RING ) திரைப்படமும் உயர்விருதுக்கு தெரிவாகியிருந்தது.
தெரிவுசெய்யப்பட்ட ஏனைய படங்களுக்கு சவாலாக அமைந்திருந்த A GUN & A RING திரைப்படக் குழுவினரை பாராட்டி மதிப்பளிக்கும் வகையில் சங்காய் 16 வது சர்வதேச திரைப்பட விழாவின் இறுதிநாள் விருது வழங்கும் விழாவை A GUN & A RING திரைப்படக் குழுவினரே ஆரம்பித்து வைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது பெருமைக்குரிய விடயமாகும்.
7 நடுவர்கள் கொண்ட குழுவின் தலைமை நடுவரான டொம் ஹுப்பர் (பிரித்தானிய இயக்குனர்) தனது அரங்க உரையின்போது A GUN & A RING திரைப்படத்தை வெகுவாகப் பாராட்டியதுடன் இப்படத்தில் நடித்திருந்த பிரான்சைச் சேர்ந்த நடிகர் பாஸ்கர் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததாக சிலாகித்து, பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

Geen opmerkingen:

Een reactie posten