தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 juni 2013

யாழில் பிள்ளைகளினால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் கைதடி முதியோர் இல்லத்தில் இணைப்பு!

யாழில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 12:31.12 PM GMT ]
யாழ் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை மரணப் பதிவேடு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ் மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டை விட தற்போது ஆறு மாதத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் இவற்றில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட இரண்டு மடங்காக இருப்பதாக அந்த மரணப் பதிவேடு குறிப்பறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
யாழில் தற்கொலை அதிகரிப்பதற்கு குடும்ப வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி குடும்ப வன்முறை கடன் தொல்லை தொழில் வாய்ப்பின்மை காதல் தோல்வி மற்றும் கள்ளக் காதல் விவகாரம் இளவயதுத் திருமணங்கள் விவகாரத்து திருமணத்திற்கு முன்னரான குழந்தை இவை தற்கொலைக்கான அடிப்படைக் காரணங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மரணப் பதிவேடு குறிப்பறிக்கை கோடிட்டுக்காட்டியுள்ளது.
தற்கொலை வீதத்தைத் தடுப்பதற்கு கிராமிய மட்டத்திலிருந்து விளிப்புணர்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட வேண்டும் அவர்களுக்கான உளவள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் பாடசாலை மட்டத்தில் இருப்பவர்களுக்காக தற்கொலை மற்றிய விளிப்புணர்வு மற்றும் தற்துணிவு தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களின் தற்கொலை வீதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் உளவள நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது. 
யாழில் பிள்ளைகளினால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் கைதடி முதியோர் இல்லத்தில் இணைப்பு
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 11:41.03 AM GMT ]
யாழ்.மாவட்டத்தில் வயோதிப பெற்றோர்கள் பலர் அவர்களது பிள்ளைகளினால் கைவிடப்பட்ட நிலையில் கவனிப்பாரற்ற நிலையில் கைதடி முதியோர் இல்லத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள வீடுகளில் பல வருடங்களாக வேலைக்கமர்த்தப்பட்டிருந்த மலையகத்தைச் சேர்ந்த சிலர் அவர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தவர்கள் இறந்து போன நிலையிலும்,
இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று விட்டதாலும் கவனிப்பதற்கு எவருமற்றதால் வயோதிப நிலையில் கைதடி முதியோர் இல்லத்துக்கு வந்து சேர்ந்திருப்பதாக இல்ல பொறுப்பாளர் கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல், மே மாதகாலங்களில் இவ்வாறு நான்கு எழுபத்தைந்து வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வந்து இணைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கந்தப்பளை, ஹட்டன், நுவரெலியா போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களாக இவர்கள் உள்ளார்கள்.
பல ஆண்டு காலமாக இவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததால் காலப்போக்கில் இவர்களுடைய சொந்தங்களினது தொடர்புகளும் அற்றுப் போயிருந்தன.
இவர்களை வீட்டில் வைத்திருந்தவர்களும் கைவிட்டு விட்டதால் இவர்கள் தமது தள்ளாத வயதில் எவரும் கவனிப்பாரற்றுக் கடைசியில் முதியோர் இல்லத்தை நாடி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten