[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 03:51.14 PM GMT ]
தம்பிலுவில் 01 வில்லியம் வீதியில் வசித்து வந்த 24 வயதுடைய கனகசூரியன் கவிதர்ஷன் என்பவரே விபத்தின் போது மரணமடைந்தவராவார்.
வறுமையான தனது குடும்பத்தின் நிலைமையினை கருத்திற் கொண்டு கடந்த 2012 ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி தொழில் வாய்ப்புக்கா சவூதி அரேபியாவுக்கு சென்றார்.
ஒரு வருட காலமாக கடமையாற்றி இந்த நிறுவனத்தில் வழக்கம் போல் இம்மாதம் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கடமை முடிந்து இருப்பிடம் நோக்கி சென்று கொண்டிருந்த போது பின்புறமாக வந்த காரொன்று இவர் மீது மோதியுள்ளது. இதனால் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் அடையாளத்தை அறிந்து உடனடியாக இலங்கையிலுள்ள உறவினர்களுக்கு அறிவித்துள்ளனர். அதனையடுத்து அவர் கடமையாற்றி வந்த நிறுவனத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையைக் கேட்டனர்.
இருப்பினும் மேற்படி நிருவாகத்தினர் இறந்தவரின் உறவினர்களிடம் எவ்வித தகவல்களையும் வழங்கவில்லை.
இறந்தது முதல் தொடர்ச்சியாக இரண்டு வாரங்களாக நிருவாகத்தினரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை.
இச் சம்பவம் பற்றியும் இறந்தவரின் சடலத்தினை எம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி உறவினர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நலன்புரி அமைச்சு ஆகியவற்றின் உயரதிகாரிகளிடம் இம்மாதம் 19ஆம் திகதி எழுத்து மூலம் அறிவித்தனர்.
இருந்த போதிலும் இறந்தவரின் தகவல்பற்றி உறவினர்களுக்கு எவ்வித தகவல்களும் கிட்டவில்லை.
குடும்ப வறுமையின் நிமித்தம் தொழிலுக்காச் சென்றவர் நாட்டுக்கு மீண்டும் வருவார் என நாம் ஆவலோடிருந்த போதிலும் அவர் இறந்த செய்தி கேட்டு தாம் பேரதிர்ச்சி அடைந்ததாகவும் துரதிஷ்டவசமாக தமது மகன் நாட்டுக்கு மீண்டும் வராவிட்டாலும் அவரின் சடலத்தையாவது எம்மிடம் ஒப்படைக்க உதவி புரியுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கோரிக்கை விடுப்பதாக அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.
வடக்கு மக்களுக்கு தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கும் டக்ளஸ்
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 03:05.08 PM GMT ]
வடக்கு தமிழ் மக்களுக்காக இந்தத் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இந்த தொலைக்காட்சி அலைவரிசை அங்குரார்ப்பண நிகழ்வு அமைச்சரின் தலைமையில் இன்று நடைபெற்றது.
டி.டி. ரி.வி என இந்த அலைவரிசைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
பக்கச்சார்பின்றியும் சுயாதீனமாகவும் செய்திகளை வெளியிடும் நோக்கில் இந்த தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten