தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 juni 2013

வடமாகாணத்திலும் வெற்றிலையில் ஆளுங்கட்சி போட்டி!- அமைச்சர் டக்ளஸ் அதிர்ச்சி!

கடந்த வாரம் அவுஸ்திரேலிய கடலில் 55 பேருடன் மூழ்கிய படகு முல்லைத்தீவிலிருந்து சென்றதா?
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 01:04.07 AM GMT ]
முல்லைத்தீவு - மாவட்டத்திலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற சுமார் 55 பேர் தொடர்பான தகவல்கள் தெரியாத நிலையில் அவர்களை ஏற்றிச் சென்ற படகுடனான தொடர்புகளும் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் உறவினர்களை தேடும் படலம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 08ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களிலிருந்தும் வந்த சுமார் 55 பேருடன் முல்லைத்தீவிலிருந்து படகு ஒன்று அனுப்பப்பட்டிருக்கின்றது.
இதற்கு ஒவ்வொருவரிடமிருந்தும் சுமார் 6லட்சம் ரூபா பணம் அற விடப்பட்டிருக்கின்றது.
மேலும் இந்தப் படகை அனுப்பி வைத்தவர் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் டெனிஸ் என்பவராவார்.
குறித்த படகு பயணித்து 16 நாட்களாகின்ற நிலையில் இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லையென உறவினர்கள் அங்கலாய்க்கின்றனர்.;
மேலும் கடந்த வாரம் அவுஸ்திரேலிய கடலில் மூழ்கிய படகுகளில் இவர்கள் பயணித்த படகும் ஒன்று எனவும், இந்தப் படகில் பயணித்த பெண் ஒருவரின் சடலம் அவுஸ்திரேலியாவில் கரையொதுங்கியதாகவும், அதனை தாம் உறுதிப்படுத்தியிருப்பதாகவும், உறவினர்கள் பரபரப்பு தகவல்களை வெளியிட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அதில் பயணித்த 55 பேருக்கும் அதே நிலையே நேர்ந்திருக்கும் என உறவினர்கள் அச்சம் கொண்டிருக்கின்றனர்.
எனினும் குறித்த படகை அனுப்பியவர்கள் தொடர்ந்தும் அடுத்த படகை கடற்படையின் முழுமையான ஆதரவுடன் அனுப்புவதற்காக ஆட்களைத் தேடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாணத்திலும் வெற்றிலையில் ஆளுங்கட்சி போட்டி!- அமைச்சர் டக்ளஸ் அதிர்ச்சி!
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 12:01.04 AM GMT ]
எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலிலும் ஆளுங்கட்சி வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிட முடிவெடுத்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2008ம் ஆண்டு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றபோது ஆளுங்கட்சியின் வெற்றிலைச் சின்னத்திலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போட்டியிட்டது.
பின்னர் அக்கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
இதே வழிமுறையைக் கையாண்டு வட மாகாண சபைத் தேர்தலிலும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட ஆளுங்கட்சி முடிவெடுத்துள்ளது.
இது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.
இதனையடுத்து மாகாண சபைத்தேர்தலில் தங்களுடைய சொந்த சின்னமான வீணையிலா, இன்றேல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னமான வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதா என்பது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தீர்மானிப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளது.
அமைச்சரும் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

Geen opmerkingen:

Een reactie posten