[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 08:01.15 AM GMT ]
ஆளுங்கட்சியில் தான் உட்பட போட்டியிடும் 20 பேர்தான் மாகாண சபை உறுப்பினர்களாக மக்களால் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழில் மற்றும் வருமான வாய்ப்புகள் இன்றி வாடும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதியே தான் இந்தத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
மேலும், வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தாலும் இந்த மாகாண சபையும் ஏனைய மாகாண சபைகள் போன்றே இயங்கும். மத்தியில் ஆளும் அரசுடன் இணக்கமான உறவைக் கட்டியெழுப்பி, வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
மேலும் வடக்கு மற்றும் தெற்கு நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கும் வடமாகாண சபை ஒரு பாலமாக செயற்படும். ஐக்கிய இலங்கையை ஆதரித்து செயற்படுவது தவிர, ஒருபோதும் பிரிவினைவாத சிந்தனையுடன் வடமாகாண சபை செயற்படாது என்றும் தயா மாஸ்டர் வலியுறுத்தியுள்ளதாக தெரண ஊடகம் தெரிவித்துள்ளது.
யாழில் கட்டாக்காலி நாய்களைப் பிடிப்பதற்கு அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்கவுள்ள டக்ளஸ்- யாழ். மாநகர சபை ஊழியர்கள் கடமை நேரத்தில் சீருடை அணியுமாறு கோரிக்கை
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 09:09.14 AM GMT ]
நேற்று யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்டாக்காலி நாய்களினால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகாரித்துள்ளது. இதனால் நாய்க்கடிக்கு இலக்காகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
நாள்தோறும் யாழ் போதனா வைத்தியசாலையில் குறைந்தது 15 பேர் நாய் பூனைக்கடிக்கு உள்ளாகி கிசிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் ஊசி மருந்தேற்றுவதற்கு பெருளவு பணத்தினை வைத்தியசாலை செலவு செய்து வருகின்றது. இவ்வாறான கட்டாக்காலி நாய்களைக் கட்டுப்படுத்த உள்ளுராட்சி மன்றங்கள் உதவ வேண்டும் என்று குறித்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நாய்களைக் கொல்லக்கூடாது என்பதில் அரசாங்கம் கொள்கையாக இருந்து வருகின்றது.
இவ்வாறு யாழ் மாவட்டத்தில் பிடிக்கப்படும் கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் அமைச்சரவையில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபை ஊழியர்கள் கடமை நேரத்தில் சீருடை அணியுமாறு கோரிக்கை
யாழ்.மாநகர சபையில் பணிபுரியும் பொது சுகாதார பரிசோதகர்கள் கடமை நேரத்தில் சீருடை அணிய வேண்டும் என யாழ். மாநகர சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் மாதாந்த கூட்டம் நேற்று யாழ்.மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சீருடைகள் அணியாமல் கடமையில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டியதை அடுத்து கடமை நேரத்தின் போது சீருடை அணிவது கட்டாயம் என மாநகர சபை ஆணையாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடமை நேரத்தில் சீருடை இன்றி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten