[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 07:37.00 AM GMT ]
5000 ரூபா ரொக்க பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலுமே அவர் இன்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரான வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமார ஆனமடுவ நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
பிணையில் விடுவித்த நீதவான், சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவேண்டாமெனவும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டார்.
வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நவகத்தேகம பாடசாலை ஆசிரியை நீதிமன்றுக்கு சமூகமளித்திருக்கவில்லை. அத்துடன் இந்த வழக்கு விசாரணை ஜுலை 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், தனது ஆதரவாளர்களுடன் ஆனமடுவ நகரத்தை வலம் வந்ததுடன் அய்யநாயக்க தேவாலயத்திற்கு சென்று சிதறுதேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.
ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஆகியன ஆனமடுவ நீதிமன்றத்திலிலிருந்து நகரத்தை நோக்கிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
பொலிஸார் மற்றும் கலகம் தடுக்கும் பொலிஸார் இணைந்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டகாரர்களை நகருக்குள் செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.
பொலிஸார் மற்றும் கலகம் தடுக்கும் பொலிஸார் இணைந்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டகாரர்களை நகருக்குள் செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.
இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொசோன் நாளில் போதையில் நடனமாடிய பௌத்த பிக்குவுக்கு விளக்கமறியல்! வாகன விபத்தில் பிக்கு பலி
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 09:59.07 AM GMT ]
கடந்த பொசோன் போயா தினத்தன்று பௌத்த பிக்கு ஒருவர் போதையில் நடனமாடிய குற்றத்துக்காக நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குருநாகல் தெலியாகொன்ன பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் புனித பொசன் போயா தினத்தில் குடித்து விட்டு நடனம் ஆடியுள்ளார்.
இந்த பௌத்த தேரர் தெலியாகொன்ன பிரதேசத்தில் உள்ள சர்வதேச ஆங்கிலப் பாடசாலைக்கு முன்னால் சிறுவர்கள் கண்டுகளிக்க நடனம் ஆடியுள்ளார்.
இது தொடர்பாக குருநாகல் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து பௌத்த பிக்கு கைது செய்யபட்டு குருநாகல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அவருடைய பௌத்த பிக்கு அடையாள அட்டையையும் பறிமுதல் செய்யுமாறும் குருநாகல் மஜிஸ்ரேட் நீதிவான் ரவிந்திர பிரேமரத்தன உத்தரவு இட்டுள்ளார்.
2ம் இணைப்பு
மஹியங்கனை வாகன விபத்தில் பிக்கு பலி
மஹியங்கனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றின் பின்பகுதியில் முச்சக்கரவண்டி மோதி ஏற்பட்ட விபத்தில் பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை காலை 8.40 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி, இரு பிக்குகள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் 33 வயதான ஒரு பிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏனையோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten