தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 juni 2013

சட்டவிரோதமாக சுவீடனில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்

இந்திய- இலங்கை உடன்படிக்கையை திருத்தி அமைக்க இந்தியாவின் அனுமதி அவசியமில்லை
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 02:28.55 AM GMT ]
இந்திய - இலங்கை உடன்படிக்கையில் திருத்தம் செய்ய இந்தியாவின் அனுமதி அவசியமில்லை என உயர் அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை இறையாண்மையுடைய நாடு என்ற ரீதியில் சுயாதீனமான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் காணப்படுகின்றது.
13ம் திருத்தச் சட்டம் குறித்து இந்திய பாதுகாப்புச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்தக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப்பட மாட்டாது.
தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரமுண்டு.
அதன் அடிப்படையிலேயே போர் நிறுத்த உடன்படிக்கையும் ரத்து செய்யப்பட்டது என குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக சுவீடனில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 02:29.41 AM GMT ]
சட்டவிரோதமான முறையில் சுவீடனில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்.
இலங்கையின் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் சுவீடனில் தங்கியிருக்கும் அகதிக் கோரிக்கையாளர்களே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர்.
விசேட விமானமொன்றின் மூலம் இவர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்.
சுவீடனில் தங்கியுள்ள இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்படவுள்ளது.
இந்த நடவடிக்கைகள் தொடர்பில் சுவீடன் அரசாங்கம் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.
போர் இடம்பெற்ற காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் சுவீடனில் தஞ்சமடைந்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten