தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 juni 2013

பிரித்தானியாவிடம் பிணை அறவிடும் திட்டத்தை ரத்து செய்யுமாறு இலங்கை கோரிக்கை விடுக்கத் தீர்மானம்!


பிரித்தானியாவில் வீசாவுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களிடம் பிணை அறவிடும் திட்டத்தை ரத்து செய்யுமாறு அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான சந்திப்பு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஆகியோருக்கு இடையே இன்று நடைபெறவுள்ளது.
பிரித்தானியாவுக்கு செல்லும் இலங்கையர்களிடம் பிணை அறவிடும் திட்டத்தை நீக்கிக்கொள்ளுமாறு இதன்போது வேண்டுகோள் விடுப்பதற்கு எண்ணியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம கூறியுள்ளார்.
இலங்கை உள்ளிட்ட மேலும் சில நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் வீசாவுக்கு விண்ணப்பிக்கும்போது மூவாயிரம் ஸ்ரேலிங் பவுண்களை பிணையாக செலுத்த வேண்டும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதிக ஆபத்தான விண்ணப்பதாரிகளிடம் இருந்து பிணை அறவிடப்படுவதாக பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Geen opmerkingen:

Een reactie posten