[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 12:00.12 AM GMT ]
வடமராட்சியின் இமையாணன் பகுதியினில் வெற்று பனங்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஜனநாயக கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவின் உரிமைகளை மீண்டும் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிக கவனம் செலுத்தி வருகிறார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.
49 வயதுடைய சித்திரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
லம்போ என்றழைக்கப்படும் குறித்த போராளி சுமார் 30 வருடகாலம் போராட்டத்தில் இணைந்து இருந்ததாக கூறப்படுகின்றது.
புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கு அண்மித்த நிலைகளிலிருந்த லம்போ மோதல் ஒன்றில் தலையில் படுகாயம் அடைந்துள்ளார்.
திருமணமாகாத நிலையில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்திருந்த லம்போ, புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக அயலவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே அவரது சடலம் சந்தேகத்திற்கு இடமான முறையில் மீட்கப்பட்டுள்ளது.
தகவலையடுத்து மீட்கப்பட்ட அவரது சடலம் வல்வெட்டித்துறை அரசினர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு, அங்கு இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவின் உரிமைகளை வழங்க ஜனாதிபதி ஆலோசனை
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 12:23.18 AM GMT ]
கடந்த வருடம் மே மாதம் 21ம் திகதி சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட போது, அவரது வாக்குரிமை மற்றும் அரசியல் ஈடுபாடு போன்றனவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இவற்றினையே தற்போது ஜனாதிபதி மீண்டும் வழங்கவுள்ளார் என அலரி மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சரத் பொன்சேகாவுடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியலில் மீண்டும் ஈடுபடவுள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
இருப்பினும் இந்தத் தகவலை உறுதி செய்ய சரத் பொன்சேகா மறுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten