தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 juni 2013

வாழைச்சேனையில் தமிழ் விவசாயிகள் மீது முஸ்லிம் குண்டர்கள் தாக்குதல்! - த.தே.கூட்டமைப்பினர் நேரில் சென்று பார்வை!

ஓட்டமாவடியில் அஸாத் சாலியின் வருகைக்கு எதிர்ப்பு: உணவகத்திற்கும் உரிமையாளரின் வீட்டிற்கும் கழிவு ஒயில் வீச்சு
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 04:48.47 AM GMT ]
வாழைச்சேனை ஓட்டமாவடியில் இன்று அஸாத் சாலியின் கூட்டம் நடைபெறவிருந்த உணவகத்திற்கும், உணவகத்தின் உரிமையாளரின் வீட்டிற்கும் ஒயில் தெளித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி மிறாவோடை பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னு ஸல்வா கோடை வாசஸ்தல உணவகத்திலும், ஓட்டமாவடி சேர்மன் வீதியில் அமைந்துள்ள மன்னு சல்வா உணவகத்தின் உரிமையாளர் அபூபக்கர் ஜீனைதீன் என்பவரின் வீட்டிற்கும் கழிவு ஒயில் வீசப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்தார். சம்பவ நேரம் வீட்டில் ஒருவரும் இருக்கவில்லை என்றும் உணவகத்தில் தான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அதனால் எவர் இதனைச் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது என்று அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அஸாத் சாலியின் கூட்டத்தினை ஏற்பாடு செய்த அஸாத் சாலி பௌன்டேசனின் கல்குடாத் தொகுதி இணைப்பாளரான ஹயாத்து முஹம்மது நிஜாம்தீன் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் இன்று நடாத்தவிருந்த கூட்டத்தை தடுப்பதற்கு விசமிகளால் மேற்கொள்ளப்பட்ட செயலாகவே இதனை தான் கருதுவதாகவும் கூட்டத்திற்காக வாழைச்சேனை பொலிஸில் அனுமதி பெற்றே கூட்டத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழைச்சேனையில் தமிழ் விவசாயிகள் மீது முஸ்லிம் குண்டர்கள் தாக்குதல்! - த.தே.கூட்டமைப்பினர் நேரில் சென்று பார்வை
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 06:14.39 AM GMT ]
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமிழ் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக 22பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாகனேரி பொத்தானைப்பகுதியில் உள்ள கொழுவாமடு விவசாய கண்டப்பகுதியில் பல காலமாக தமிழர்கள் விவசாயம் செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் யுத்தம் நிறைவுபெற்ற பின்னர் இப்பகுதியில் உள்ள காணிகளை பிடித்தும் பலரிடம் ஆசை வார்த்தை காட்டி காணிகளை வாங்கியுள்ள முஸ்லிம்கள் சிலர் இப்பகுதியில் தமிழர்களின் விவசாய நடவடிக்கைகக்கு தடைகளை ஏற்படுத்திவருவதுடன் அவர்களுக்கான நீர் விநியோக நடவடிக்கைகளையும் தடுத்துவந்தனர்.
இது தொடர்பில் கடந்த ஆண்டும் இரு சமூகங்களுக்கும் இடையில் இது தொடர்பில் இப்பகுதியில் முறுகல் நிலையேற்பட்டு இராணுவத்தின் தலையீட்டின் காரணமாக அந்த முறுகல் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று அப்பகுதிக்கு சென்ற பெருமளவான முஸ்லிம் குண்டர்கள் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதன்போது 22 விவசாயிகள் காயமடைந்த நிலையில் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 17பேர் சிகிச்சை பெற்று சென்றுள்ள நிலையில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர்,
தமது பகுதிக்கான தண்ணீர் வரும்பகுதியை சில முஸ்லிம் விவசாயிகள் அடைத்துவைத்து தமது பகுதிக்கு அதனை திரும்பியிருந்தனர்.இதனை திறந்துவிடுமாறு பல்வேறு தடவைகள் கோரியபோதிலும் நடவடிக்கையெதுவும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் பல தடவைகள் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தபோதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்,தண்ணீர் இல்லாத காரணத்தினால் எமது விவசாய நடவடிக்கைகள் முடங்கிப்போகின.
இதனை கருத்தில்கொண்டு இன்று அப்பகுதியில் விவசாயம் செய்யும் நாங்கள் அப்பகுதிக்கு சென்று தண்ணீர் கட்டப்பட்டுள்ள பகுதியில் திறந்துவிட முயற்சி செய்தோம்.
இந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த பெருமளவானோர் எம்மீது தாக்குதல் நடத்தினர்.தாக்குதல் நடத்தியவர்களில் அதிகமானோர் அப்பகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்.அவர்கள் விவசாய நடவடிக்கைகளில் அப்பகுதியில் ஈடுபடுவதில்லை.திட்டமிட்ட வகையிலேயே எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்குதல் நடத்துவதன் மூலம் இப்பகுதியில் உள்ள காணிகளை தமிழர்கள் விற்றுவிட்டுச்செல்வார்கள் என அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை தாக்குதல் நடத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன் அக்கட்சியின் பொருளாளர் தேவராஜன் உட்பட பலர் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.
மட்டக்களப்பில் தாக்குதலுக்குள்ளானவர்களை த.தே.கூட்டமைப்பினர் நேரில் சென்று பார்வையிட்டனர்
மட்டக்களப்பு வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது ஒரு குழுவினர் நேற்று வழிமறித்து தாக்கியதில் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை தமிழ் தேசிய கூட்மைப்பினர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சென்று பார்வையிட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களின் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
இவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
அத்தோடு இவ்விடயமாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களிடம் வாக்குறுதியளித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten