தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 juni 2013

பாடசாலைகளிற்குச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தடை: வடமாகாண ஆளுனர் உத்தரவு !

வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அனுமதிக்க வேண்டாமென வடமாகாண ஆளுனரின் உத்தரவுக்கமைய, ...
...வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலனால் மாகாணத்தின் சகல வலயக் கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கு சுற்று நிருபம் அனுப்பப்பட்டுள்ளது.
அச்சுற்று நிருபத்திற்கமைய வடமாகாண ஆளுனரின் பிரகாரம் வடமாகாண அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளை அரசியல் கூட்டங்கள் மற்றும் கலந்தாய்வுகள் நடாத்துவதற்குப் பயன்படுத்த இடமளிக்கக் கூடாதெனவும் இவ் உத்தரவினை மீறும் பாடசாலை அதிபர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சுறுத்தல் தொனியில் சுற்று நிருபம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த இவ் உத்தரவானது, பாடசாலை சமூகத்தினரிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது செயற்பாடுகள் குறித்து பெற்றுவரும் நன்மதிப்பினைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மேற்கொள்ளப்பட்ட ஒரு காழ்ப்புணர்ச்சியாகவே மக்கள் கருதுகின்றனர்.
கிளிநொச்சி மத்திய கல்லூரியைக் குத்தகைக்கு எடுத்திருப்பது போன்று சீருடை தரித்தோர் அரங்கேற்றிவரும் காட்சிகள், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை தடுக்க நினைக்கும் ஆளுனரதும் அவர் சார்ந்தோரது புலன்களுக்கும் தெரிய வராமல் இருப்பது ஏன் என அங்குள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த பொசன் தினத்தன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்திலுள்ள பாடசாலைக் கிணற்றில் உள்ளாடைகளுடன் குளித்துக் கொண்டிருந்த சீருடை தரித்தோரால் மாணவிகள் அசௌகரியங்களுக்குள்ளாகியதும் கிளிநொச்சி மகாவித்தியாலத்தில் சீருடை தரித்தோரால் மேற்கொள்ளப்பட்ட பொருட்காட்சியால் மாணவர்களது கல்வி பாதிப்படைந்ததும், கல்விச் செயற்பாடுகளில் இராணுவத்தினரின் தலையீடு எந்த அளவில் காணப்படுகிறது என்பதற்கு ஒரு அளவுகோலாக உள்ளது எனக் பொதுமக்கள் கவலை கொண்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten