பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஷ் கயானி தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது அவர் பாதுகாப்பு செயலாளர் மற்றும் ராணுவத் தளபதி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கும் அவருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இலங்கை ராணுவத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பயிற்சிகளுக்கு மேலதிகமாக கூடுதல் பயிற்சி அளிப்பது தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இதன் மூலம் இலங்கை ராணுவத்தினரை இந்தியாவில் பயிற்சிக்கு அனுப்புவதை நிறுத்தி, இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க இலங்கை திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பின் போது இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்குகள், இரண்டு நாடுகளிலுமுள்ள உயர்கல்வி வாய்ப்புகள், இலங்கை ராணுவத்தின் முப்படைப் பயிற்சித் திட்டமான நீர்க்காகம் போர் ஒத்திகை போன்ற விடயங்கள் குறித்தும், இரண்டு நாடுகளையும் சேர்ந்த இராணுவ அதிகாரிகளிடையே இருபக்க புரிந்துணர்வு மற்றும் நல்லெண்ணம் என்பவற்றை மேலும் விரிவாக்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten