இறுதிப்போரில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் ஆயுதத் தட்டுப்பாடு நிலவிய விடையம் பலராலும் அறியப்பட்டதே. முன்னேறி வரும் இராணுவத்தை தடுக்க புலிகள் பல வழிகளில் கடுமையாகப் போராடி வந்தார்கள். இதேவேளை அவர்களிடம் குறைவான எண்ணிக்கையில் கண்ணிவெடிகள் இருந்ததால், முக்கியமான இடங்களில் மட்டுமே அதனைப் புதைத்தார்கள். ஆனால் மழை பொழிவது போல, இலங்கை இராணுவம் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டு இருந்தது. பல ஷெல் விழுந்து வெடித்தாலும் அதில், சில வெடிக்காமல் மண்ணுக்குள் புதைவது வழக்கம். இதனைக் கூட புலிகள் பயன்படுத்த தவறவில்லை. வெடிக்காத ஷெல்களை எடுத்து, அதன் கீள் பகுதியில் மும் முனை இருப்பு ஒன்றைப் பொருத்தி, மண்ணில் புதைத்துள்ளார்கள்.
ஷெல்லின் மேற்பகுதியில் ஏற்கனவே இருக்கும் டெட்டினேட்டரை , மாற்றியமைத்து அதில் உள்ள சேப்டி கிளிப் இழுபடும்வேளை அது வெடிக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்கள் புலிகள். இதன் காரணமாக இலங்கை இராணுவம் அடிக்கும் ஷெல்களில் வெடிக்காத அனைத்தையும் புலிகள் கண்ணிவெடியாக மாற்றி பயன்படுத்தியுள்ளார்கள். சமீபத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பிரிவினர் கண்டுபிடித்த சில , கண்ணிவெடிகளைப் பார்வையுற்ற இராணுவத்தினர் ஆடிப்போனார்களாம். தாம் அடித்த ஷெல்லை இப்படி எல்லாம் உபயோகித்து இருக்கிறார்களே என்று அவர்கள் வியந்துகொண்டார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten