[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 05:56.24 AM GMT ]
'அரசாங்கம் தற்போது சகல வளங்களையும் தந்துள்ளது. அதனை நாம் உரிய வகையில் பெற்றுக் கொள்ளவேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 27 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றி அவர்,
'இப்பாடசாலையில் ஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தை கட்டுவதற்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் எடுத்த முயற்சி தற்போது நிறைவேறியுள்ளது.
இப்பாடசாலைக்குரிய மாணவர் தங்குமிட வசதியினையும் நான் புனரமைத்துத் தருவேன் என்பதனை உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன்.
மட்டக்களப்பு மாநகரத்திலுள்ள பாடசாலைகளை விட இப்பாடசாலை துரிதமாக முன்னேற்றம் கண்டு வருகின்றது. இப்பாடசாலை மாணவர்கள் அனைத்து பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்றார்கள். இதனால் இப்பிரதேசமும் முன்னேற்றம் கண்டுவருகின்றது.
அதுபோல் கழுவாஞ்சிகுடி பிரதேசத்தினை மையப்படுத்தி காணப்படுகின்ற களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையானது தற்போது தரமுயர்த்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மட்டு.நகருக்கு அடுத்த பெரிய நகரமாக மட்டக்களப்பில் காணப்படுவது களுவாஞ்சிகுடிப் பிரதேசம்தான். களுவாஞ்சிகுடி பிரதேச சபையினை நகரசபையாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றேன்.
தற்போது தமிழர்களின் இருப்பு கல்வி மற்றும் பொருளாதாரத்தில்தான் தங்கியுள்ளது.
தற்போது மட்டக்களப்பில் 20.1 வீதம் வறுமை காணப்படுகின்றது. ஆனால் வவுனியாவில் 2.1 வீதம் வறுமையே காணப்படுகின்றது. இதனை வைத்துப் பார்க்கின்றபோது நாம் இன்னும் எவ்வளவோ முன்னேற்றமடைவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
அரசாங்கம் தற்போது சகல வளங்களையும் தந்துள்ளது. அதனை நாம் உரிய வகையில் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அரசு தற்போது வடமாகாணசபைத் தேர்தலை நடத்தவுள்ளது. இத்தேர்தலில் எந்தவொரு வன்முறைகளும் இடம்பெறக் கூடாது என ஜனாதிபதி அவர்கள் கூறியுள்ளார்' என்று தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல்: மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டி
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 05:37.34 AM GMT ]
தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற மலையக மக்கள் முன்னணி, மத்திய மாகாண சபை கலைக்கப்படவுள்ள நிலையில், இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இது தொடர்பில் தீர்மானிப்பதற்காக இன்று பிற்பகலில் மலையக மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழு ஹட்டனில் ஒன்று கூடவுள்ளது.
இதன் போது தேர்தல் குறித்த இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸிக்கு அடுத்தபடியாக, மலையக மக்கள் முன்னணி மலையகத்தின் முக்கிய கட்சியாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten