13ம் திருத்தச் சட்டத்தின் மீதான திருத்தங்கள் குறித்து மேல் மற்றம் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் வாக்களிப்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்துக் கொள்ளாது என்று தெரிவிக்கப்படுகிறது.
13ம் திருத்தச் சட்டத்தின் மீதான திருத்தங்கள் குறித்த பிரேரணை அண்மையில் வடமேல் மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட போது, கட்சியின் அறிவிப்புக்கு புறம்பாக வாக்களித்த இரண்டு உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 13ம் திருத்தச் சட்டத்தின் மீதான திருத்தங்களை எதிர்ப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் குறித்த பிரேரணை கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களில் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படும் போது, முஸ்லிம் காங்கிரஸ் வாக்கெடுப்பை புறக்கணிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten