தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 juni 2013

நளினியை ஜூலை 29ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை!

காணாமல் போன படைசிப்பாய் தூக்கிலிருந்து சடலமாக மீட்பு
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 03:11.00 AM GMT ]
கிளிநொச்சி, இரணைமடு காட்டுப் பகுதியில் படைச்சிப்பாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரணைமடு படை முகாமில் பணியாற்றி வந்த சமிக்ஞை பிரிவைச் சேர்ந்த எஸ்.எம்.என்.ஜி படைப்பிரிவின் விக்கிரமசிங்க என்ற சிப்பாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவார்.
இவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது சடலத்தை பார்வையிட்ட கிளிநொச்சி பதில் நீதிவான் சடலத்தை பிரேதப் பரிசோதனைகளுக்கு  உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

நளினியை ஜூலை 29ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 12:51.12 PM GMT ]
சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், வேலூர் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நளினி ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று  அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் நளினி.
சிறைக்குள் செல்போன், சிறு கத்தி வைத்திருந்தது கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற சோதனையில் தெரியவந்தது.
இதனையடுத்து நளினி மீது சிறு கத்தி, சிம் கார்டு வைத்திருந்ததாக அவர் மீது நான்கு வழக்குகள் பதியப்பட்டன.
இந்நிலையில், 1வது நடுவர்மன்ற நீதிபதி வரும் ஜூலை 29ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று  அழைப்பாணை அனுப்புமாறு  நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

Geen opmerkingen:

Een reactie posten