தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 juni 2013

சிறுபான்மை இனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்: பொதுபல சேனா பகிரங்க எச்சரிக்கை

மேர்வின் சில்வா மற்றும் மகனுக்காக முன்னேஸ்வரம் காளிகோவிலில் சிதறு தேங்காய் உடைத்து மன்றாட்டம்!
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 10:57.34 AM GMT ]
அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் அவருடைய மகன் மாலக சில்வாவுக்காக அவர்களுடைய ஆதரவாளர்கள் முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோவிலில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அமைச்சருக்கும் அவருடைய மகனுக்கும் எதிராக சூழ்ச்சிக் செய்ததாக கூறப்படுகின்றவர்களை தண்டிக்குமாறு அவர்களுடைய ஆதரவாளர்கள் மன்றாடியதுடன் சிதறு தேங்காயும் உடைத்துள்ளனர்.
களனி பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களே இன்று வெள்ளிக்கிழமை இந்த பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னேஸ்வரம் காலி கோவிலில் நடத்தப்படவிருந்த பலி பூஜைக்காக கொண்டு செல்லப்பட்ட கோழிகள் மற்றும் ஆடுகளை அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் 2011ம் ஆண்டு செப்டெம்பர் 11ம் திகதி அபகரித்துச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
சிறுபான்மை இனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்: பொதுபல சேனா பகிரங்க எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 11:32.30 AM GMT ]
இலங்கையின் சிறுபான்மை இனங்கள் மீது இன்னும் ஒரு மாதகாலத்துக்குள் பொதுபல சேனா அமைப்பு தாக்குதல் நடத்தும் என்று அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுபல சேனாவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர்,
ஜுலை மாதத்தில் வரும் எசல போயாவிற்கு முன்பாக இந்நாட்டில் இயங்கும் சிறுபான்மை அமைப்புகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது போனால் நாங்கள் இந்நாட்டின் உத்தியோகபூர்வமற்ற காவல்துறையினர் என்ற ரீதியில் சிறுபான்மை அமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் இனிவரும் காலங்களில் சிங்களக் கிராமங்களுக்குள் நுழையும் அந்நிய இனத்தவர்களை அடித்துவிரட்டும் நோக்கில் பௌத்த பாதுகாப்பு குழுவொன்றை அனைத்து சிங்களக் கிராமங்களிலும் உருவாக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten