நாட்டின் அனைத்து இன மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் தீர்வுத் திட்டத்தை முன்வைக்காது, நாட்டை முன்னேற்றமடையச் செய்ய முடியாது.
இன சமூகங்களுக்கு இடையில் சந்தேகத்தை ஏற்படுத்தி தீர்வு வழங்காமல் இருந்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
சிங்கள தேசியவாதத்தை விற்றுப் பிழைக்கும் சிலரினால் நாட்டுக்கு பாதக நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சி பீடம் ஏறிய போது தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்குவதாக அறிவித்த போதிலும், இதுவரையில் தீர்வு வழங்கவில்லை.
ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் தங்களைக் கூறிக் கொள்ளும் சிலர் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய முயற்சிக்கின்றனர்.
எனினும், 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அநேக முக்கியஸ்தர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருpகின்றனர்.
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் முயற்சிகளை நிறுத்த வேண்டுமென மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten