[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 06:01.02 AM GMT ]
பொது நடவடிக்கை ஒன்றுக்காக இந்த காணிகளை கையகப்படுத்தப் போவதாக அறிவித்து, அங்கிருந்த முஸ்லிம்களை வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பிரதேச செயலகம் ஊடாக கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 26 பேரை இராணுவத்தினர் இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
அவரது உத்தரவிற்கமைய, கடந்த 19ந் தேதி அந்த பகுதிக்கு காவற்துறையினரின் உதவியுடன் சென்ற நகர அபிவிருத்தி அதிகாரச் சபையின் அதிகாரிகளும் தொழிலாளர்களும், பலவந்தமாக குறித்த குடும்பங்கள் வசிக்கும் நிலப்பகுதியை அடையாளமிட்டு, வேலி போட்டிருந்தனர்.
இந்நிலையில் பாதுகாப்பு செயலாளரின் அடாவடி நடவடிக்கை தொடர்பாக மனுவொன்று அங்கு வசிக்கும் மக்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
காலி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், நகர அபிவிருத்தி அதிகாரச்பை ஆகிய தரப்பினர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
பொது நடவடிக்கை எனக் கூறி, அரசாங்கம் தமது காணிகளை கையககப்படுத்த முயற்சித்து வருவதாக மனுதார்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த காணி எப்படியான பொது நடவடிக்கைக்காக கையகப்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை எனவும் மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த மனு மீதான விசாரணைகள் நீதியரசர்கள் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் மாலனி குணரட்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது முஸ்லிம்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு நீதியரசர்கள் தடையுத்தரவு பிறப்பித்தனர்.
இச்சம்பவம் சிறுபான்மை இன மக்களின் காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் பெயரில் கையகப்படுத்தும் கோத்தபாய ராஜபக்சவின் தொடர் நடவடிக்கைக்கு கிடைத்த முதல் அடியாக கருதப்படுகிறது.
அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 26 பேர் களுவாஞ்சிகுடி கடற்கரையில் கைது
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 06:16.41 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி கடற்கரையிலிருந்து சட்டவிரேதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா, இங்கிரிய, மீகம களுவாஞ்சிகுடி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 23பேர் கைது
மட்டக்களப்பில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 23பேர் இன்று அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் கடற்கரையிலிருந்து சட்டவிரேதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முற்பட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருக்கள்மடம் இராணுவ முகாமுக்கு கிடைக்கப்பெற்ற தகவலிகன் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இவர்களை கைதுசெய்யதுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒன்பதுபேர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் எனவும் 14பேர் தமிழர்கள் எனவும் கைதுசெய்யப்பட்டவர்களின் ஐந்து வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் உள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜத் பிரியந்த தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என தெரிவித்த பொலிஸார் அதிகமானொர் வவுனியா, குருணாகல், வென்னப்புவ மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து பெருமளவான அரிசி, சீனீ, சோயாமீட் மூடைகள் உட்பட பெருமளவான உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten