தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 juni 2013

தற்போதைய அரசை இரண்டாக பிரிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முயற்சி! விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

போதிய வசதியிருந்தும் மக்களுக்கு பயன்படாத பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை: மக்கள் அவதி (செய்தி ஆய்வு)
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 10:32.16 AM GMT ]
வைத்தியசாலைக்குரிய போதியளவான கட்ட வசதிகளுடன் உள்ள பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் வைத்திய சேவைகள் சீராக நடைபெறாமையினால் பொதுமக்கள் வேறு வைத்தியசாலையை நாடிச் செல்லும் அவலநிலை தொடர்கின்றது.
யாழ்.குடாநாட்டில் பல கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மருத்துவ வசதிகள் நிறைவாகக் கிடைக்காமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். இதனால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தினமும் பெருமளவான நோயாளர்கள் படையெடுத்துச் செல்கின்றனர்.
சாதாரண இருமல், காய்ச்சல் முதல் குழந்தைப்பேறு வரை அனைத்துக்குமே குடாநாட்டு மக்கள் நாடிச் செல்லும் ஒரே வைத்தியசாலையாக யாழ். போதனா வைத்தியசாலைதான் உள்ளது. இதனால் அதிகரித்துச் செல்லும் நோயாளர்களினால் அவ்வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறையும் அடிக்கடி ஏற்படுகின்றது.
பெருமளவான நோயாளர்கள் நடைபாதைகளில் படுத்துறங்குகிறார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைவரையும் கவனிக்க வேண்டியிருப்பதால் வைத்திய சேவைகளும் அனைவருக்கும் நிறைவாகக் கிடைப்பதுமில்லை.
ஒரு மாவட்டத்திலுள்ள அனைத்து நோயாளர்களும் ஒரு வைத்தியசாலையை நாடிச் செல்வதினால் அங்கு அனைத்துத் தரப்பினருக்கும் பல அசௌகரியங்கள் ஏற்பட்டு வருகின்றது. இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்காகவே அரசாங்கம் பிரதேச ரீதியாக அரசினர் மற்றும் பிரதேச வைத்தியசாலைகளை நிறுவியுள்ளது. மக்களின் அவசர மருத்துவ தேவைகளை உடனே தீர்த்துக்கொள்வதற்காக இவ்வாறான வைத்தியசாலைகளை அத்தியவசிய வசதிகளுடன் அமைத்துள்ளது.
இவ்வாறு யாழ்.குடாநாட்டில் தற்போது 23 பிரதேச வைத்தியசாலைகளும் 4 ஆதார வைத்தியசாலைகளும் மற்றும் 13 ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையங்களும் உள்ளன. குறைந்த பட்சமாக 5 கிராமங்களை உள்ளடக்கிய பொதுமக்களின் உடனடி மருத்துவ தேவைகளை நிறைவேற்றக்கூடியதாக இவைகள் காணப்படுகின்றன.
இவ்வாறே வலிகாமம் தென்மேற்குப் பிரதேசத்தில் பிரதேச வைத்தியசாலைக்குரிய அனைத்து வசதிகளுடனும் பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை உள்ளது.
வெளிநோயாளர் பிரிவு, நோயாளர் தங்குமிடம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தங்குமிடம், பிரசவ அறை மற்றும் பிரேத அறை என்பன முழுமையாகக் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மருத்துவர்கள் தங்குவதற்கான தங்குமிடமும் சகல வசதிகளுடனும் இங்கு உள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.
இவ்வைத்தியசாலையை அண்மித்துள்ள பண்டத்தரிப்பு, சில்லாலை, மாதகல், இளவாலை, விளான் போன்ற பிரதேசங்களில் வாழும் மக்கள் இதன் முலம் நிறைவான மருத்துவ வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இவ்வைத்தியசாலை தற்போது முழுமையாக இயங்கிக் கொள்வதில்லை.
பெரும் செலவில் கட்டப்பட்ட வைத்தியசாலை விடுதிகளும் பிரசவ அறையும் நீண்டகாலமாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. கட்டில்களும் மெத்தைகளும் பாவிக்கப்படாமல் கைவிடப்பட்டு உள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இவ்வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மாத்திரம் தினமும் வழமை போல இயங்கி வருகின்றது. அதிலும் அதிகமான நோயாளர்களுக்கு யாழ். போதனா வைத்தியசாலைக்கோ அல்லது யாழ். பண்ணை வைத்தியசாலைக்கோ, சங்கானை அரசினர் வைத்தியசாலைக்கோ செல்வதற்கான உபதேசங்கள் தான் வழங்கப்பட்டு வருகின்றன. சிறிய நோய்களுக்காக செல்பவர்களும் மருத்துகளை வாங்குவதற்காக தனியார் பார்மஸிகளுக்கே அனுப்பப்பட்டு வருகின்றனர்.
தற்போது இவ்வைத்தியசாலையில் ஒரு பெண் வைத்தியர் மாத்திரமே கடமையாற்றி வருகின்றார். அவருடன் ஒரு மருத்துவமாதுவும் ஒரு மருத்துக்கலவையாளரும் மற்றும் சிற்றூழியர்களும் கடமையில் உள்ளனர். வைத்தியசாலைக்கென ஒரு அம்புலன்ஸ் வாகனமும் உள்ளது.
இப்பிரதேசத்திலுள்ள மக்களில் அதிகமானோர் இவ்வைத்தியசாலையைச் சென்று நேரத்தை வீணடிக்காமல் நேராகவே யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சென்றுவிடுகின்றனர். கர்ப்பிணித் தாய்மார்களையும்; அதிக பணச் செலவுடன் முச்சக்கர வண்டிகளிலோ அல்லது வேறு வாகனங்களிலோ யாழ். போதனா வைத்தியசாலைக்கே கொண்டு செல்கின்றனர்.
இவ்வாறு யாழ்.குடாநாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேசங்களிலிருந்தும் நோயாளிகள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு படையெடுத்துச் செல்வதால் அங்கு தினமும் சனநெருசல் ஏற்பட்டு வருகின்றது.
சகல வதிகளுடனும் உள்ள இவ்வைத்தியசாலை முறையாக இயங்குமாக இருந்தால் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் அனைவரும் நிறைவான மருத்துவ வசதியைப் பெற்றுக்கொள்வார்கள்.
1992 ஆம் ஆண்டு நடைபெற்ற முன்னேறிப் பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையால் இப்பகுதி மக்கள் இடம்பெயர்வதற்கு முன்னர் இவ்வைத்தியசாலை இரண்டு கட்டடங்களுடனும் சொற்ப வசதிகளுடனும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வந்துள்ளது. நோயாளர் தங்குமிடம், பிரசவ பிரிவு என்பன இரவு பகலாக இயங்கி வந்தன.
மருத்துவர்களும் தாதியர்கள் மற்றும் ஊழியர்களும் நிறைவாக இருந்து சேவையாற்றியுள்ளனர் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அதிக கட்டங்களுடனும் சகல வசதிகளுடனும் இவ்வைத்தியசாலை உள்ளபோதும் இப்பகுதி மக்களுக்கான வைத்திய சேவை நிறைவாகக் கிடைப்பதில்லை அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் இவ்வாறனதொரு ஒரு வைத்தியசாலை இருப்பதையே மக்கள் மறந்துவிட்டார்கள். பலருக்கு இவ்வைத்தியசாலை அமைத்திருக்கும் இடம் கூடத் தெரியாது. நிறைவான இடவசதிகளைக் கொண்டுள்ள பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலைக்கு வடமாகாண மற்றும் மாவட்ட சுகாதாரத் திணைக்களங்கள் மேலதிகமாக வைத்தியர் ஒருவரை நியமித்து ஆளணிகளை அதிகரித்தும் அதன் செயற்பாட்டை விருத்தி செய்ய வேண்டும்.
வைத்தியசாலையை அண்மித்து வாழும் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மருத்துகளும் இங்கு கிடைப்பதற்கு வசதிகளைச் செய்ய வேண்டும். இதன் முலம் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு இவ்வைத்தியசாலை மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
யாழ். போதனா வைத்தியசாலை தினத்தோறும் எதிர்நோக்கிவரும் இடப் பற்றாக்குறை, அதிக நோயாளர் வருகை போன்றவற்றைக் குறைத்துக் கொள்வதற்கு இவ்வாறான பிரதேச வைத்தியசாலைகளை சிறப்பாக இயங்க வைத்து அவற்றைக் கண்காணித்து வருவதன் முலமே தீர்த்துக் கொள்ள முடியும். இதற்கு யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரும் மாகாண, மாவட்ட சுகாதாரத் திணைக்களங்களும் கலந்தாலோசித்து ஒர் தீர்வினைக் காண வேண்டும்.
பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்ட கட்டடங்களும் வளங்களும் எவருக்குமே பயனின்றி பூமிக்குப் பாரமாக உள்ளன.


தற்போதைய அரசை இரண்டாக பிரிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முயற்சி! விமல் வீரவன்ச குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 10:15.18 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் தற்போதைய அரசையும் இரண்டாக பிரிப்பதற்கும் 13வது திருத்தத்தை துரும்பாகக் கொண்டு அரசில் உள்ள சில அமைச்சர்களை தூண்டிவிடுகின்றார் என அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஸ்ரீ.ல.சு. கட்சியை இரண்டாகப் பிரித்தது பின் சந்திரிகாவின் மகன் விமுக்தியைக் கொண்டு அரசியல் நடாத்துவதற்காக அவர் முயல்கின்றார் என அமைச்சர் விமல் வீரவன்ச இன்று அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளாரே கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கை இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்திடும் விடயத்தில் எதிராக இருந்தவர்கள் தற்பொழுது அதற்கு ஆதரவாக உள்ளார்கள். ராஜித, ரெஜினோல்ட் குரே போன்றோர்கள் சந்திரிகாவின் கணவரின் கட்சியான மகாஜன கட்சியில் இருந்தவர்கள். அவர்கள் அன்றும் ஆதரவாக இருந்தார்கள் இன்றும் ஆதரவாகப் பேசுகின்றனர்.
ஆனால் செப்டம்பரில் தமிழ்த் தேசிய முன்னணியிக்கு வடக்கு மாகாணசபை ஆட்சி செல்வதற்கு முன் 13வது திருத்தத்தில் பொலிஸ் காணி அகற்ற வேண்டும் அந்த நிலைப்பாட்டிலேயே எமது கட்சி உள்ளது. வடக்கில் எமது கட்சி போட்டியிடுவதில்லை.
இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தில் முதலில் மீறியது இந்தியாவே ஒப்பந்தம் கைச்சாத்திட்டு விடுதலைப் புலிகள் ஆயுதத்தை கீழே வைப்பார்கள் என்று சொல்லி இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்திட்டது.
ஒப்பந்தம் கைச்சாத்திட்டு 5 நாட்கள் செல்லவில்லை, விடுதலைப்புலிகள் ஆயுதத்தை வைக்கவில்லை. இதனை மீறியது இந்தியாவே.
ஊடகவியலாளர் கேள்வி - ஐ.தே.கட்சி 13வது திருத்தத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ள ஆதரவு இல்லை என தெரிவித்துள்ளார்களே?  ஐ.தே.கட்சி எதிர்காலத்தில் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசியல் செய்வதற்காகவே உள்ளனர். அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக ஐ.தே.கட்சி செயல்படுகின்றது.
ஊடகவியலாளர் - கேள்வி இந்தியா 13வது திருத்தத்தினை மேற்கொள்ளக்கூடாது என இலங்கை அரசுக்கு தெரிவித்தால் உங்களது நிலைப்பாடு என்ன?
இது இந்தியாவின் லோக சபை இல்லை இலங்கைப் பாராளுமன்றம். ஊடகவியளாளர் கேள்வி வாசுதேவ நாணயக்கார 13ல் எவ்வித சொல்கின்றாரே?
வாசுதேவ நாணயக்கார போன்றோர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். அவர்கள் யுத்தம் செய்யாமல் சமாதானம் செய்யச் சொன்னவர்கள். வட கிழக்கை இணைத்து சுயாட்சி முறை வழங்கச் சொன்னவர்தான் வாசுதேவ நாணயக்கார போன்றோர்கள்.
ஆனால் ஐனாதிபதி தற்போது உள்ள ஆட்சியில் உள்ள சகல கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு இத் திருத்தத்தை மேற்கொள்ளவே முயற்சிப்பதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

Geen opmerkingen:

Een reactie posten