தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 juni 2013

தமிழீழத்தின் மீதான உறுதிப்பாட்டை மீண்டும் ஒருதடவை தமிழ்மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கை சுகாதார துறையை ஏமாற்றும் இலங்கை தேசிய போக்குவரத்து நிறுவகம்!- ஒரு சிறப்பு கண்ணோட்டம்
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 04:22.55 PM GMT ]
இலங்கை தேசிய போக்குவரத்து நிறுவகமானது சுகாதார அமைச்சை ஏமாற்றி வைத்தியர்களை மோசடி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தூண்டி வருகின்றதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இலங்கையில் வாகனச் சாரதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவச் சான்றிதழானது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மாவட்டச் செயலகங்களில் வழங்கப்பட்டு படிவங்களைக் கொண்டு அனுமதி பெற்ற அனைத்து வைத்தியர்களாலும் வழங்கப்படலாம் என்ற நிலையில் இருந்தது.
இதன் பின்னர் இலங்கை தேசிய போக்குவரத்து நிறுவகமானது அதனைக் கட்டுப்படுத்துவதற்காகவும் சிறந்த சேவையை வழங்குவதற்காகவும் தம்மிடம் அனுமதி பெற்ற வைத்தியர்களுக்கு மாத்திரம் அந்த சேவையை வழங்க அனுமதி வழங்கியது.
இந்நிறுவனமானது நாட்டில் சகல இடங்களிலும் பல்வேறு கிளைகளை திறந்ததோடு அனுமதி வழங்கப்பட்ட வைத்தியர்களுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்குதற்காக விசேட படிவங்களையும் குறைந்தளவு பணத்திற்கு வழங்கியது.
இந்த விசேட படிவங்கள் தவிர வேறு எந்த படிவங்களும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிலையே காணப்பட்டது.
இந்நிலையில் கொழும்பில் உள்ள கேஹவல என்ற இடத்தில் இந்த விசேட படிவங்கள் அதிகூடிய பணத்திற்கு போலி முகவர்களிடம் விற்பனை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனுமதி வழங்கி வைத்தியர்களின் உரிமங்களை ரத்து செய்த நிறுவகம் தனது கிளைகளில் வைத்தியர்களை பணிக்கு அமர்த்தி அவற்றை வழங்கி வருகின்றது.
இந்நிலையில் இவ்வாறு பணிக்கு அமர்த்து வைத்தியர்கள் அரச வைத்தியசாலைகளில் சேவை செய்யாதவர்கள் அல்லது அரச துறையில் இருந்து முற்றாக விலகி தனியார் துறையில் இருக்கின்றவர்களாக இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஆனால் யாழ்ப்பாணத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியரான எஸ்.முகுந்தன் என்ற வைத்தியர் வைத்தியசாலை கடமை நேரத்தில் நிறுவகத்தின் அலுவலகத்திலும் பணியாற்றி வருகின்றார்.
காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் இவர் பணியில் இருக்க வேண்டும். ஆனால் காலை 10 மணி முதல் 2 மணிவரை இவர் நிறுவகத்தில் பணியாற்றுகின்றார்.
ஒரு நாளைக்கு சுமார் நான்கு மணித்தியாலங்கள் இவருக்கு சம்பளம் வழங்கப்படுகின்றதாகத் தெரியவருகின்றது.
இதில் விசேட அம்சமாக இலங்கை தேசிய போக்குவரத்து நிறுவக முல்லைத்தீவு பகுதிக்கும் வவுனியாவிற்கும் இவரது சகோதரி வைத்தியர் பூங்கோதை தயாளசீலனும் வவுனியாவில் இவரது சகோதரியின் கணவன் வைத்தியர் தயாளசீலனும் இந்த பணியை மேற்கொள்கின்றனர்.
இவர்கள் ஏற்கனவே அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றிக் கொண்டே இந்த பணியையும் மேற்கொள்கின்றனர்.
சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியர்களை எந்தவித காரணங்களைக் கொண்டு கடமை நேரத்தில் உள்ளீர்க்க வேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ள நிலையில் போக்குவரத்து அமைச்சானது சுகாதார அமைச்சிற்கு வைத்தியர்களை வைத்து விளையாட்டு காட்டி வருகின்றது.
இந்த விளையாட்டில் யாழ்ப்பாண அலுவலகத்தின் பங்கானது மிகவும் சிறந்த நிலையில் உள்ளது.
சாதாரணமாக 600 ரூபாவிற்கு வழங்கும் மருத்துவ சான்றிதழை 800 ரூபாவிற்கு யாழப்பாண அலுவலகம் வழங்குகின்றது.
இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் புகைப்படம் எடுத்து ஒட்டுகின்றனர். இதற்காக வெளியில் இருந்து கொண்டு வரும் புகைப்படம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று எழுதி வேறு போட்டுள்ளனர்.
இதனால் கிடைக்கும் 200 ரூபா பணத்தில் யாழ்.அலுவலகத்தில் பணியாற்றும் செரினா என்ற பெண் பணியாளருக்கும் சிங்கள முகவர் ஒருவருக்கும் குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை விட வைத்தியர் முகுந்தன் ஒரு நாளைக்கு சுமார் அரை மணித்தியாலங்கள் தான் இங்கு கடமையாற்றுகின்றார். காரணம் வைத்தியசாலையிலிருந்து அவ்வளவு சுலபமாக வெளியே வர முடியாது.
இதனால் அவசர அவசரமாக வந்து சுமார் 100 முதல் 150 படிவங்களுக்கு கையொப்பம் இட்டு விட்டு ஓடிவிடுவார் என்று தெரிவிக்கின்றனர்.
இதனால் இந்த சான்றிதழானது எவ்வளவு தூரம் பெறுமதியானது என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது.
இதனை விட வாகனங்களுக்கான வழி அனுமதியை வழங்குவதற்காக இவர் பெறும் லஞ்சக் குற்றச்சாட்டுக்கள் இங்கு சேர்க்கப்படவில்லை.
யுத்ததினால் பாதிக்கப்பட்ட வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் 36 ஆயிரம் பேர் தமது விண்ணப்பங்களை சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இவ்வளவு பெரிய தொகையை ஒரு வைத்தியரைக் கொண்டு ஈடு செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு மிகவும் கடினமானது.
ஆனால் யாழ்ப்பாணத்தில் மருத்துவ சான்றிதழைப் பெறுவதற்கு இலங்கை தேசிய போக்குவரத்து நிறுவகத்தின் அனுமதி பெற்ற 54 வைத்தியர்கள இப்பணியை மேற்கொண்டு வந்தனர்.
அவர்கள் அனைவரும் இப்போது பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக இப்போது ஒரு வைத்தியரே இந்த பணியை முற்றாக மேற்கொள்கின்றார்.
அதுவும் யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றிக் கொண்டே இதனை அவர் செய்கின்றார்.
இதனை விட இழையவியல் பகுதி மருத்துவ நிபுணர்கள் செய்ய வேண்டிய ஸ்கான் பரிசோதனையை சாதாரண மருத்துவ அதிகாரியான இவர் செய்வது எந்தளவு தூரம் நியாயமானது.
மருத்துவ சட்டங்களின் படி அவர் இதனைச் செய்ய முடியாது என்று வாதாடுகின்றனர் வைத்தியர்கள்.
இவ்வாறு மிகவும் மோசடியானதாகவும் பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை தேசிய போக்குவரத்து நிறுவகத்தின் செயற்பாடுகள் மக்களை வெகுவாகப் பாதித்துள்ளன.
இதிலும் வடக்கு கிழக்கு போன்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு திட்டங்களை மேற்கொள்ளும் போது அவற்றை பல முறை சிந்தித்து அமுல்படுத்த வேண்டும்.
இல்லாது விட்டால் இவ்வாறு ஒரு அரச துறை இன்னொரு அரச துறையை ஏமாற்றி மோசடிகளுக்கு வழி வகுக்க வேண்டும்.
வாழ்க மகிந்த சிந்தனையும், செயற்பாடுகளும். இவ்வாறு சென்றால் விரைவில் ஆசியாவின் ஆச்சரியமாக மாறும் இலங்கை..

தமிழீழத்தின் மீதான உறுதிப்பாட்டை மீண்டும் ஒருதடவை தமிழ்மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 03:19.17 PM GMT ]
தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்தில் 1 இலட்சத்து 17 ஆயிரம் பேருக்கு மேல் ஆர்வத்துடன் பங்கெடுத்து கொண்டதன் ஊடாக, தமிழீழ விடுதலையின் மீதான உறுதிப்பாட்டை தமிழ்மக்கள் மீண்டுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பாலம்பிகை முருகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த மே18ம் நாள் முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனம் தொடர்பில் இடம்பெற்றிருந்த ஊடகநிகழ்ச்சியொன்றில் பங்கெடுத்திருந்த பொழுதே இக்கருத்தினை அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார்.
முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான ஆதரவினை அனைத்துலக சிவில் சமூகத்தின் மத்தியில் பெற்றுக் கொள்வதோடு , தமிழ்மக்கள் மத்தியிலும் இது தொடர்பிலான விழிப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
2009ம் ஆண்டுக்கு பின்னர் ஈழத்தமிழினம் தனது அகத்திலும்- புறத்திலும் புதியதொரு சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில், தமிழீழ சுதந்திர வேட்கையில் தமிழ்மக்கள் இன்னும் வழிப்பாகவுள்ளனர்
என்பதனை தமிழீழ சுதந்திர சாசனத்தில் ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்டதன் ஊடாக தமிழ்மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் எனஅமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் மேலும் அந்நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை மையமாக கொண்டு அமெரிக்காவில் இடம்பெற்றிருந்த மாநாட்டில், முழுமையாக பங்கெடுத்து தனது கருத்துக்களையும் அம்மாநாட்டில் வழங்கியிருந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் நிரந்தரச் செயலர் விஜய் ஜெயந்தன் அவர்கள், மாநாட்டில் பங்கெடுத்திருந்த பேராளர்கள் வழங்கிய கருத்துக்கள் தொடர்பில் தெளிவாக இந்நிகழ்சியில் வழங்கியிருந்தார்.
தமிழீழ சுதந்திர சாசன மாநாடு மற்றும் முரசறைவு ஆகியனவற்றின் பிரதான விடயங்கங்களின் காணொளித் தொகுப்பினை குறித்த இந்த நிகழ்சியின் ஊடாக முமுமையாக காணமுடியும் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

Geen opmerkingen:

Een reactie posten