[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 11:48.46 AM GMT ]
தங்களுக்கென நியமித்த பாடசாலைகள் மிகத் தூரத்தில் இருப்பதாகவும், போக்குவரத்துச் செலவுக்கே குறித்த சம்பளம் போதாது எனவும் வாழ்க்கைச் செலவை கவனிப்பது என்று வன்னித் தொண்டர் ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த இராணுவ வீரர்களுக்கு இனிமேலும் பயிற்சி அளித்தால் அது இந்தியாவின் ஒற்றுமைக்கே ஆபத்து நேரிடும். இதனை மத்திய அரசு உணர்ந்து தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வைகோ ஆக்ரோசமாக பேசினார்.
வன்னியில் புதிதாக நியமனம் பெற்ற தொண்டர்களில் அதிகமானவர்கள் அவர்களின் வீட்டிலிருந்து மிகவும் தூரத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் உடையார்காடடில் வசிப்பவருக்கு கொக்குத் தொடுவாய்,கருநாட்டுக்கேணி போன்ற மிகவும் தொலை தூரப்பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
15 வருடத்திற்கும் மேலாக சம்பளம் இன்றி கற்பித்த வன்னித் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் என்று கூறி வெறும் ஆறாயிரம் ரூபாவுடன் மிக மிகத் தூரப் பாடசாலைகளுக்கு நியமிக்கப் பட்டமையால் வன்னித் தொண்டர் ஆசிரியர்கள் செய்வதறியாது கலங்குகின்றார்கள்.
இந்தியாவின் ஒற்றுமைக்கே ஆபத்து நேரிடும்! வைகோ ஆக்ரோசம்
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 11:53.44 AM GMT ]
குன்னூர் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து இன்று ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தது.
நேற்று இரு இலங்கை இராணுவ வீரர்களும் வெளியேற்றப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டு கண்டன பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டது.
இப்பொதுக் கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ பேசியதாவது,
இலங்கையில் ஈழத்தமிழர்களைக் கொன்று போர்க்குற்றம் புரிந்த இராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க கூடாது.
இனிமேலும் பயிற்சி அளித்தால் அது இந்தியாவின் ஒற்றுமைக்கே ஆபத்து நேரிடும். இதனை மத்திய அரசு உணர்ந்து தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.
2ம் இணைப்பு
அவர் தொடர்ந்து பேசுகையில்,
கொடுவாளினை எடடா.. கொடியோர் செயல் அறவே. கொடு வாளினை எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது. அதற்குள் இரண்டு சிறு நாய்கள் பயந்து ஓடி விட்டன.
தொடர்ந்து இந்தியா தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் இந்த வெலிங்டன் இராணுவ மையத்தில் தொடர்ந்து பயிற்சியளிக்கிறது.
இது தொடர்ந்தால் தமிழகத்திற்கு இந்தியா அண்டை நாடாக மாறி விடும்.
இதே வெலிங்டனில் தமிழ் வீரர்களும் தான் இருக்கிறார்கள். அவர்களுக்குள்ளும் எங்கள் உணர்வு இருக்கத்தான் செய்கிறது.
எம் தமிழ் இராணுவ வீரர்களே! உங்கள் மனசாட்சிக்கு புறம்பாக இராணுவம் உங்களை நடக்கச் சொல்கிறது. தவறாக உங்களை வழி நடத்துகிறது என்று நீங்கள் நினைத்தால், அந்த செயலை செய்யாதீர்கள்.
இப்படி இராணுவத்தைப் பற்றி பேசுவது தேசத் துரோக செயல் என்றால் அந்த செயலை வைகோ செய்து கொண்டேயிருப்பான்.
எந்த தேசத் துரோக வழக்கையும் எதிர் கொண்டவர்கள் தான் இந்த மேடையிலே இருக்கிறோம்.
கொத்து கொத்தாய் குழந்தைகளை கொன்றொழித்த ராஜபக்சவுக்கும், அவனின் இராணுவ நாய்களுக்கும் இங்கே சிவப்புக் கம்பளம் விரித்து, மருந்தும், விருந்தையும் கொடுத்து இன்ப சுற்றுலாவுக்கு அனுப்பி வைக்கும் காங்கிரஸ் அரசை நீங்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஊரை விட்டே ஓட வைக்க வேண்டும்.
அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய தலையாய கடமை என்று முழங்கினார் வைகோ.
Geen opmerkingen:
Een reactie posten