[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 04:18.26 AM GMT ]
இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் பிரிவுக்கான அதிகாரி மைக்கல் ஏர்வின் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதி நிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு நேற்று காலை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன அலுவல கட்டிடத்தில் நடைபெற்றது.
இதன் போது இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் பிரிவுக்கான அதிகாரி மைக்கல் ஏர்வின் வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன நடவடிக்கை தொடர்பாகவும் அதன் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தகர்களின் நிலை மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் உட்பட மாவட்டத்தில் வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது அவரிடம் எடுத்துக் கூறப்பட்டதாக மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன நிறைவேற்று அதிகாரி எஸ்.குகதாஸ் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி மற்றும் அதன் உப தலைவர்கள் மற்றும் உறுப்பிர்கள் கலந்து கொண்டதாக சம்மேளன நிறைவேற்று அதிகாரி எஸ்.குகதாஸ் மேலும் கூறினார்.
வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவேன்: கே.பி சூசகமாகத் தெரிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 03:02.53 AM GMT ]
வடக்கு மாகாணசபை தேர்தலில் இருந்து விலகும் எண்ணம் தமக்கு இல்லையென தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான குமரன் பத்மநாதன், சரியான நேரத்தில் சரியானது நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தேசியப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மேலும் தேர்தல் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துவரும் நிலையில், இன்னமும் தேர்தல் தொடர்பான முடிவுகளை தான் எடுக்கவில்லையெனவும், கட்டாயமாக நல்ல முடிவாக தான் எடுப்பேன், சரியான நேரத்தில் சரியானது நடக்கும் என அந்த செவ்வியில் கே.பி குறிப்பிட்டிருக்கின்றார்.
ஏற்கனவே புலிகளின் ஊடகப் பிரிவிற்குப் பொறுப்பாகவிருந்த தயா மாஸ்டர் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், உள்ளிட்ட 10 பேர் வடக்கில் தேர்தலுக்கு தயார்ப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கே.பி இந்த அறிவிப்பை விடுத்து தேர்தலில் நிச்சயமாகப் போட்டியிடுவேன் என சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்.
ஆனால் இவர்களுக்கு வாக்குப் போடுவது யார்? என்ற கேள்வி வடக்கிலுள்ள ஊடகங்களிடமும், மக்களிடமும் பலமாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten