திடீரென ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வுவேண்டும் என்று அறிவித்துள்ளார். மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு உறங்கும் வேளை நல்ல கணவு வரும். கணவைக் கண்டு திடுக்கிட்டு எழுந்த நபர்போல ஈழத் தமிழர்களுக்கு தீர்வுவேண்டும் என்று இவர் திடீரெனக் கூறி தான் நடத்தும் அரசியல் சாக்கடையை மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளார் அவ்வளவு தான். காங்கிரஸ் அரசு போடும் எலும்புத்துண்டுகளை கவ்வி அதனை யாருக்காவது கொடுக்கவேண்டுமே ! அதுதான் இவர் நடத்திய மற்றுமொரு நாடகம். டெல்லியில் மாநாடு என்று சொல்லி சில புலம்பெயர் தமிழர்களைக் கூட்டினார். 13 வது திருத்தச்சட்டம் ஒன்றுதான் தீர்வு என்று அவரே அவருக்கு அறிவித்து, கோமாளி ஆட்டம் ஆடினார். இப்போது அறிக்கை மழை ! அடிக்கடி ஈழத் தமிழர்கள் விவகாரத்தை கையில் எடுத்து அவர் அறிக்கை விட தனை சில ஊடகங்கள் பெரிதுபடுத்திப் போட்டு, இவரை ஒரு சுப்பிரமணிய சுவாமி ரேஞ்சுக்கு கொண்டுபோய் விட்டுள்ளார்கள்.
2008ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னதாக இவருக்கு ஐ.நாவில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே அவர் வெட்டிப் பேச்சு பேசினாரே தவிர ஈழத் தமிழர்கள் தொடர்பாக எதனையும் பேசவில்லை. பின்னர் 2009ம் ஆண்டு ஈழத்தில் போர் உக்கிரமடைந்தவேளை இவர் எங்கே மறைந்திருந்தார் என்று யாருக்கும் தெரியாது. அதற்கு முன்னதாகவும் அவர் ஈழத் தமிழர்கள் குறித்து அவ்வளவாகப் பேசுவது இல்லை. தனக்கு இல்லையென்றால் தன் கட்சிக்கு ஆதாயம் உண்டு என்றால் ஈழத் தமிழர்கள் குறித்து இவர் அவ்வப்போது அறிக்கை விடுவார். அவ்வளவுதான். இது போன்று ஈழத் தமிழர்களின் ரத்தத்தின் மீது நின்று அரசியல் நடத்தும் , இவரைப் போன்றவர்களை, தமிழர்கள் நிச்சயம் இனம் காணவேண்டும். ஈழத் தமிழர்களுக்கு உதவிசெய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாமல் இருந்தால் அதுவே போதும். அது சரி காங்கிரஸ் கட்சி அமைச்சரான சுதர்சன நாச்சியப்பனிடம் எந்த ஈழத் தமிழர் கேட்டார்கள், எமக்கு ஒரு தீர்வுபெற்றுத் தருமாறு ?
தமிழ் நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆதரவு துளிர்விடவேண்டும் என்றால் அதற்கு காங்கிரஸ் தமிழர்கள் மனதில் இடம்பிடிக்கவேண்டும். அதனை விடுத்து இவ்வாறு ஈனத்தனமாக ஈழத் தமிழர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தக்கூடாது ! இதனை ஒரு ஈழத் தமிழன் என்ற வகையில் நான் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
Geen opmerkingen:
Een reactie posten